முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெறும் 10 நிமிடம் இருந்தா போதும் கம கமக்கும் ஜீரா புலாவ் தயார்..!

வெறும் 10 நிமிடம் இருந்தா போதும் கம கமக்கும் ஜீரா புலாவ் தயார்..!

10 நிமிடம் போதும், சுவையான ஜீரா புலாவ் ரெடி.

10 நிமிடம் போதும், சுவையான ஜீரா புலாவ் ரெடி.

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட சீரகத்தை வைத்து ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாமா?.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலருக்கு பிரியாணி என்ற வார்த்தையை கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். அந்தவகையில், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட சீரகத்தை வைத்து ஒரு அருமையான சாதம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

சீரகம் குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதுமட்டும் அல்ல, இரத்த அழுத்த நோய் குணமாகும். இரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.

அதிக மசாலா பொருட்கள் ஏதும் இன்றி, வீட்டில் இருக்கும் பொருட்களை மட்டும் கொண்டு மிகவும் எளிமையான முறையில் சுவையான ஜீரா புலாவ் செய்வது எப்படி என பார்க்கலாம்.

​தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்.

நெய் – 2 ஸ்பூன்.

எண்ணெய் – 2 ஸ்பூன்.

பட்டை - 1.

கிராம்பு - 4.

ஏலக்காய் - 2.

பிரியாணி இலை - 1.

சீரகம் - 1 ஸ்பூன்.

பச்சை மிளகாய் - 2.

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்.

கொத்தமல்லி தழை - 1 கொத்து.

​செய்முறை :

முதலில் புலாவ் செய்ய எடுத்துக்கொண்ட அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து, ஒரு 30 நிமிடத்திற்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அரிசி ஊறிய பின், தண்ணீரை வடிக்கட்டி அரிசியை மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தாளித்த சேர்மங்கள் கருகுவதற்கு முன்னதாக, இதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயினை நீளவாக்கில் கீறி சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.

தற்போது புலாவ் செய்ய, ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

Also Read | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலிஃபிளவர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

மனம் மாறும் நிலையில், தயாராக எடுத்து வைத்துள்ள அரிசியை இதில் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு எண்ணெயில் லேசாக வறுக்க வேண்டும். அரிசியை சேர்த்து கிளறும் போது அரிசி உடைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

தற்போது ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் என்ற விதத்தில், குக்கரில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு கொதி வரும் வரை காத்திருக்கவும்.

முதல் கொதி வந்ததும் குக்கரை மூடி, அடுப்பை அரை தீயில் வைத்துவிடுங்கள். பின்னர் 2 விசில் வந்ததும் குக்கரை இறக்கவிட்டு, விசில் அடங்கும் வரை காத்திருங்கள்

top videos

    விசில் அடங்கியதும், குக்கரை திறந்து புலாவின் மீது கொத்தமல்லி தழைகளை தூவி லேசாக கிளறிவிடுங்கள். அவ்வளவு தான் ஜீரா புலாவ் ரெடி! சுட சுட உங்களுக்கு பிடித்த கிரேவியுடன் பரிமாறுங்கள்.

    First published:

    Tags: Cumin, Food, Food recipes