முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வீக் எண்ட் ஸ்பெஷல் மீன் பிரியாணி செய்யலாமா..? இதோ ரெசிபி..!

வீக் எண்ட் ஸ்பெஷல் மீன் பிரியாணி செய்யலாமா..? இதோ ரெசிபி..!

மீன் வைத்து ஒரு சூப்பரான பிரியாணி செய்வோமா?

மீன் வைத்து ஒரு சூப்பரான பிரியாணி செய்வோமா?

மீனை வைத்து உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு முறை இப்படி பிரியாணி செய்து கொடுங்க. அப்படியா அசந்து போயிருவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

Fish Biryani Recipe : அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணி பிடிக்காத ஜீவிகளை பார்ப்பது அரிதான விஷயம். காலை, மதியம், இரவு என மூன்று நேரம் பிரியாணி கொடுத்தாலும் நம்மில் பலர் சலிக்காமல் சாப்பிடுவோம். அந்தவகையில், மீனுடன் சில மசலா பொருட்கள் சேர்த்து சுவையான மீன் பிரியாணி எளிமையான முறையில் எப்படி தயார் செய்வது என இந்த தொகுப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

மீன் - 1 கிலோ.

வெங்காயம் - 2.

இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்.

சீரகம் - 1 ஸ்பூன்.

கரம் மசாலா - 1 ஸ்பூன்.

கொத்தமல்லி பொடி - 1 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

தயிர் - 1 கப்.

கொத்தமல்லி இலைகள் - 1 கப்.

பச்சை மிளகாய் (இரண்டாக நறுக்கியது) - 2.

பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்

அரிசி - 2 கப்.

கிராம்பு - 4.

இலவங்கப்பட்டை - 1.

ஏலக்காய் - 4.

குங்குமப்பூ அல்லது புட் கலர் (தேவைப்பட்டால்).

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும். இதை தொடர்ந்து எடுத்துக்கொண்ட மீனையும் சுத்தம் செய்து சரியான அளவில் நறுக்கி வைக்கவும்.

தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். இதை தொடர்ந்து கரம் மசாலா, கொத்தமல்லி பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதையடுத்து, அதில் தயிர், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து 5 - 7 நிமிடங்களுக்கு வதக்கி, பின்னர் நறுக்கி வைத்த மீன் துண்டுகளையும் சேர்த்து (நன்கு வேகும் வரை) அரை வெப்பத்தில் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

Also Read | பூசணிக்காய் வைத்து ஒரு சூப்பரான பனாரஸி அல்வா செய்யலாமா..? இதோ ரெசிபி..

தற்போது, பிரியாணி செய்ய குக்கர் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, மிளகு சேர்த்து தாளிக்கவும். தொடர்ந்து அரிசியையும் சேர்த்து வறுக்கவும்.

அரிசியின் நிறம் மாறும் நிலையில் இதில் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி விடவும். பின் 3 விசில் விட்டு சாதத்தை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

தற்போது குக்கரில் தனியே தயார் செய்த பிரியாணி சாதத்துடன் முன்பே தயார் செய்து வைத்த மீன் சேர்மத்தை சேர்துதக்கொள்ள சுவையான மீன் பிரியாணி ரெடி. இறுதியாக இதன் மீது கொத்தமல்லி தூவி சுட சுட பரிமாறலாம்.

First published:

Tags: Briyani, Fish Fry, Food, Food recipes