முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் எடையை குறைக்க உதவும் சம்பா கோதுமை ரவை கிச்சடி!

உடல் எடையை குறைக்க உதவும் சம்பா கோதுமை ரவை கிச்சடி!

குழைந்தைகளுக்கு பிடித்த கோதுமை கிச்சடி செய்முறை இதோ!

குழைந்தைகளுக்கு பிடித்த கோதுமை கிச்சடி செய்முறை இதோ!

நீங்க உடல் எடையை குறைக்க டயட் இருப்பவரா?... அப்போ இந்த பிரேக் பாஸ்ட் ரெசிபியை ட்ரை பண்ணுங்க. உடல் எடை வேகமாக குறையும்.

  • Last Updated :
  • Tamil |

தற்போதையை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. நிற்க கூட இடம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வேலைகளுக்கு மத்தியில், நடைப்பயிற்சி செய்யவும், உடற்பயிற்சி செய்யவும் நமக்கு நேரம் இல்லை. அனைவராலும் முடிந்த ஒன்று டயட்டில் இருப்பது. அந்தவகையில், நீங்கள் உடல் எடையை குறைக்க டயட் இருப்பவராக இருந்தால், நாங்கள் ஒரு சூப்பரான காலை உணவு ரெசிபி பற்றி கூறுகிறோம்.

சம்பா கோதுமை ரவையை கொண்டு தயாரிக்கப்படும் கிச்சடி (அ) உப்புமா உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். சம்பா கோதுமை ரவை வைத்து சுவையான முறையில் வீட்டிலேயே எப்படி கிச்சடி செய்வது என இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இடித்த கோதுமை - 250 கிராம்.

கேரட் - 2.

பீன்ஸ் - 7.

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்.

பச்சை மிளகாய் - 2.

வெங்காயம் - 1.

இஞ்சி - ஒரு சிறிய துண்டு.

முந்திரிபருப்பு - 5.

சமையல் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் கிச்சடி செய்ய எடுத்துக்கொண்ட வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதேப்போன்று பச்சை மிளகாய், பீன்ஸ், கேரட் ஆகியவறையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஏதும் சேர்க்காமல் இடித்த கோதுமையை சேர்த்து வறுத்துக்கொள்ளவும். பின்னர் வறுத்த இந்த கோதுமையை ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும்.

தற்போது அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Also Read | உடல் எடையை வெறும் 7 நாளில் குறைக்க உதவும் பூசணிக்காய் ஜூஸ்!

பின்னர், மீண்டும் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து இஞ்சியை இடித்து சேர்த்து வறுக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கியதும், இதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதி வரும் நிலையில் இதில் வறுத்து வைத்த கோதுமையினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, அடிப்பிடிக்காமல் கிளறி விட சுவையான கோதுமை கிச்சடி ரெடி.

top videos

    சுவையான இந்த கிச்சடியினை பொட்டு கடலை சட்னி, தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு சட்னியுடன் சேர்த்து சுட சுட பரிமாறலாம்.

    First published:

    Tags: Food, Food recipes, Weight loss