முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வீட்டில் காய்கறிகளே இல்லையா.. முட்டை இருந்தால் போதும்... செட்டிநாடு சுவையில் அசத்தல் குழம்பு தயார்..!

வீட்டில் காய்கறிகளே இல்லையா.. முட்டை இருந்தால் போதும்... செட்டிநாடு சுவையில் அசத்தல் குழம்பு தயார்..!

முட்டை குழம்பு

முட்டை குழம்பு

இதை சட்னி, தோசை, சாதம் என எதற்கும் சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும்..

  • Last Updated :
  • Tamil Nadu, India

வீட்டில் முட்டை இருந்தால் போதும் சமையல் செய்வோருக்கு கவலையே வேண்டாம். அதை வைத்து குழம்பு, பொரியல் என  விருந்தே வைத்துவிடலாம். அதிலும் செட்டிநாட்டு கைப்பக்குவத்தை கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் போதும் தெருவே மணக்க குழம்பு தயாராகிடும். அந்த வகையில் முட்டை கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதை சட்னி, தோசை , சாதம் என எதற்கும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை - 5

வெங்காயம் - 1

எண்ணெய் - 5 tsp

உப்பு - 1 1/2 tsp

மிளகாய் தூள் - 2 tsp

தனியா தூள் - 1 tsp

மஞ்சள் தூள் - 1/2 tsp

பிரியாணி இலை - 1

கொத்தமல்லி - கைப்பிடி அளவு

வதக்கி அரைக்க :

தக்காளி - 3

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 15 பல்

இஞ்சி - 1/2 துண்டு

வரமிளகாய் - 3

அரைக்க :

தேங்காய் - 5 பத்தை

சோம்பு - 2 1/2 tsp

சீரகம் - 1 tsp

மிளகு - 1 tsp

கசகசா - 1 tsp

ஏலக்காய் -5

கிராம்பு - 4

பட்டை - 1/2 துண்டு

முந்திரி - 5

கொத்தமல்லி - 1 கொத்து

செய்முறை :

  • முதலில் முட்டைகளை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பின் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • அடுத்ததாக வதக்கி அரைக்க கடாய் வைத்து எண்ணெய் விட்டு பூண்டு, இஞ்சித் துண்டு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் காய்ந்த மிளகாய் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாடை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு அதை ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பிரிஞ்சு இலை, சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • அடுத்ததாக அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். இவற்றுடன் தூள் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்து கெட்டிப்பதம் வரும் வேளையில் வேக வைத்த முட்டையில் கீரல் போட்டு குழம்பில் போடவும். அதோடு கொத்தமல்லி தழை தூவவும்.
  • நன்கு கிளறி சிறு தீயில் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
  • அவ்வளவுதான் செட்டிநாடு சுவையில் முட்டை கிரேவி தயார்.
First published:

Tags: Egg, Egg recipes