முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலிஃபிளவர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலிஃபிளவர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

காரசாரமான கோபி பெப்பர் ப்ரை செய்முறை இதோ!

காரசாரமான கோபி பெப்பர் ப்ரை செய்முறை இதோ!

காலிஃபிளவர் வைத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை இந்த ரெசிபியை செய்து கொண்டங்க. வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அசைவ உணவுகளின் சுவையை கொடுக்கும் உருளைக்கிழங்கு, காளான், சேனைக்கிழங்குக்கு மத்தியில் காலிஃபிளவர் மிகவும் பிடித்த உணவுப்பொருட்களில் ஒன்று. இந்நிலையில், காலிஃபிளவர் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து செய்யப்படும் மிகவும் எளிமையான மற்றும் சுவையான வறுவல் ரெசிபி ஒன்றை நாங்கள் கூறுகிறோம்.

இதை வெறும் 15 நிமிடத்தில் செய்துவிடலாம். இது ரசம், சாம்பார் மற்றும் தயிர் சாதத்துடன் நன்றாக இருக்கும். காலிஃபிளவர் மிளகுப் பொரியல் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

காலிபிளவர் - 200 கிராம்.

மைதா - 1/2 கப்.

சோள மாவு - 1/2 கப்.

மிளகு பொடி - 2 ஸ்பூன்.

பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்.

சோயா சாஸ் - 2 ஸ்பூன்.

பெரிய சைஸ் வெங்காயம் - 1.

பூண்டு - 6 பல்.

பச்சை மிளகாய் - 2.

கறிவேப்பிலை - 1 கொத்து.

சர்க்கரை - 1 ஸ்பூன்.

மஞ்சள் - 1 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில், கோபி பெப்பர் ப்ரை செய்ய எடுத்துக்கொண்ட காலிபிளவரை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி எடுத்துக்கொள்ளவும்.

இதை தொடர்ந்து, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தனித்தனியே வைக்கவும்.

இப்போது, அகன்ற பாத்திரம் ஒன்றில், போதுமான அளவு தண்ணீருடன் பொடியாக நறுக்கிய காலிபிளவர், மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து வேக வைக்கவும். காலிபிளவர் வெந்த பின்னர், தண்ணீரை வடித்து காலிபிளவரை மட்டும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

Also Read | உடல் எடையை குறைக்க உதவும் போஹா… 10 நிமிடத்தில் ரெடி செய்வது எப்படி?

இதனிடையே ஒரு மிக்ஸிங் பாத்திரத்தில் மைதா, சோள மாவு, மிளகு பொடி (1 ஸ்பூன்), பேக்கிங் சோடா, சோயா சாஸ் (1 ஸ்பூன்), சர்க்கரை ஆகியவற்றை போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

இதை தொடர்ந்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும். எண்ணெய் கொதிக்கும் நிலையில் இதில் காலிபிளவரை (மாவு சேர்மத்தில் முக்கி எடுத்து) சேர்த்து - பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.

பின்னர், இதே கடாயில் சிறிதளவு எண்ணெயுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மிளகு பொடி, உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு தாளிக்கவும்.

top videos

    தொடர்ந்து இதனுடன் பொரித்து வைத்த ‘காலிஃப்ளவர் வறுவலை’ சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வறுத்து எடுக்க சுவையான காலிபிளவர் பெப்பர் ப்ரை ரெடி. சுட சுட ஒரு தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான்.

    First published:

    Tags: Cauliflower recipe, Food, Food recipes