முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முட்டைகோஸ் பொரியலை இனி இப்படி செய்து பாருங்கள்...

முட்டைகோஸ் பொரியலை இனி இப்படி செய்து பாருங்கள்...

முட்டைகோஸ் பொரியல்

முட்டைகோஸ் பொரியல்

cabbage Poriyal | முட்டை கோஸ் பொரியல் எல்லோருக்குமே ரொம்பவும் பிடிக்கும். ஆனால் அதையே வீட்டில் செய்வதாக இருந்தால் யாரும் முட்டைகோஸ் பொரியலை அதிகம் விரும்புவது கிடையாது. இதை செய்வது ரொம்பவே சுலபம். இதோ ரெசிபி...

  • Last Updated :
  • Tamil Nadu, India

முட்டைகோஸ் பொரியல் செய்வது மிகவும் எளிமையானது. அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், இதன் சுவைஅலாதியாக இருக்கும். சரி, அந்த முட்டைகோஸ் பொரியலை எப்படி செய்வதென்று இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் - 1

வெங்காயம் - 3-4

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 1/2 கப்

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் முட்டைகோஸை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

2. பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

3. பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு, இறுதியில் முட்டைகோஸ் சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு, மூடி வைத்து 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

top videos

    4. தண்ணீரானது நன்கு வற்றிய பின், அதில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்போது சூப்பரான முட்டைகோஸ் பொரியல் ரெடி.

    First published:

    Tags: Cabbage, Food, Vegetable