முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பனீர் பிரட் பக்கோடா செய்யலாமா..? சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பனீர் பிரட் பக்கோடா செய்யலாமா..? சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபி

பன்னீர் பிரட் பக்கோடா

பன்னீர் பிரட் பக்கோடா

How To Make Stuffed Bread Pakoda | பன்னீரை வைத்து ஒரு முறை உங்கள் குழந்தைகளுக்கு இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை செய்து விடுங்க. மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரோட்டுக்கடை உணவுகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அது பஜ்ஜி, போண்டா, மெதுவடை, பானி பூரி, பேல் பூரி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் என்னதான் வீட்டில் சில விஷயங்களை சமைத்தாலும், அவை கடையில் வாங்கு சுவைக்கு வருவதில்லை என நாம் பல முறை வருத்தப்பட்டிருப்போம்.

அந்தவகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் பனீர் பிரட் பக்கோராவை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பனீர் - 1 கப்.

வெங்காயம் - 2.

பச்சை மிளகாய் - 3.

இஞ்சி_பூண்டு விழுது - 1 ஸ்பூன்.

சீரக பொடி - 1 ஸ்பூன்.

மல்லி பொடி - 1 ஸ்பூன்.

சாட் மசாலா - 1 ஸ்பூன்.

பிரட் துண்டுகள் - 2.

கடலை மாவு - 3 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவையான ஆளவு.

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்து எடுத்துக்கொண்ட பனீரை நன்கு துருவி பன்னீர் துருவல் தயார் செய்யவும்.

தற்போது அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெங்காயம், பன்னீர் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, சீரகத் தூள், கொத்தமல்லி தூள், சாட் மசாலா, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

இதனிடையே எடுத்துக்கொண்ட பிரட்டினை வேண்டிய அளவில் வெட்டி - தண்ணீரில் முக்கி ஊற வைத்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Also Read | வயிற்று உப்புசத்தை நொடியில் மறைய வைக்கும் தேநீர்..!

அதேநேரம் ஒரு தனி கிண்ணத்தில், கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கடலை மாவு கரைச்சல் தயார் செய்துக்கொள்ளவும்.

பின்னர் பக்கோரா பொரித்து எடுக்க கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து போதுமான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

இதற்கிடையில் தயாரா உள்ள பிரட் துண்டுகளுக்கு இடையில் பிசைந்து வைத்த மாவு போதுமான அளவு வைத்து திணித்து - கிண்ணத்தில் உள்ள கடலை மாவில் முக்கி கொதிக்கும் எண்ணெயில் சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்க சுவையான பிரட் பக்கோரா தயார்

top videos

    சுவையான இந்த பிரட் பக்கோராவினை சுட சுட ஒரு தட்டில் வைத்து உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

    First published:

    Tags: Food, Food recipes, Paneer Recipe in Tamil