நம்மில் பலருக்கு காலை உணவு பிரட் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பிரடை ரோஸ்ட் செய்தோ, பிரட் ஆம்பிளேட் செய்தோ அல்லது வேறு விதங்களிலோ நம் காலை உணவை முடிப்போம். எப்பவும் போல ஒரே ரெசிப்பியாக செய்யாமல், பிரட்டை வைத்து ஒரு அருமையான ரெசிபி எப்படி செய்வது என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
உருளைக்கிழங்கை வைத்து கார சாரமாக செய்யப்படும் மசாலா ரோல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று. இந்த பிரட் மசாலா ரோலை வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – கால் கிலோ.
பச்சை மிளகாய் – 3.
கரம் மசாலா – அரை ஸ்பூன்.
சீரகத்தூள் – அரை ஸ்பூன்.
சாட் மசாலா – அரை ஸ்பூன்.
மிளகுத்தூள் – கால் ஸ்பூன்.
எண்ணெய் – கால் லிட்டர்.
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்.
பெரிய வெங்காயம் – 1.
பிரட் – 10 துண்டுகள்.
இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்.
உப்பு – ஒரு ஸ்பூன்.
கறிவேப்பிலை – ஒரு கொத்து.
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை :
முதலில் குக்கரில் பாதியளவு தண்ணீர் எடுத்து அதில் எடுத்து வைத்துள்ள உருளைகிழங்கு சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
இதை தொடர்ந்து, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்போது, தோலுரித்த உருளைக் கிழங்கை எடுத்து, சிறு சிறு துண்டுகளாக நன்கு உடைத்துவிட வேண்டும்.
பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு ஆகிய அனைத்தும் சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
Also Read | நாவில் எச்சில் ஊறவைக்கும் ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி..?
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கால் லிட்டர் எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்ற வேண்டும். அதேநேரம் மசாலா ரோலுக்கு தேவையான பிரட் துண்டுகளை எடுத்து, அதன் ஓரங்களை வெட்டி எடுத்துவிட வேண்டும்.
பின்னர் இந்த பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து, இதன் நடுவே நாம் ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள உருளை கிழங்கு மசாலாவை சிறிதளவு வைத்து, உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும், இந்த பிரட் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரட் மசாலா ரோல் தாயார். சுடசுட குழந்தைகளுக்கு நாம் இதை பரிமாரலாம். இதை காலை உணவாகவும், மாலையில் தேநீருடனும் சேர்த்து சாப்பிடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bread, Bread recipes, Food, Food recipes, White bread