முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அசைவ பிரியர்களுக்கு பிடித்த சில்லி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி?

அசைவ பிரியர்களுக்கு பிடித்த சில்லி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி?

சில்லி சிக்கன்

சில்லி சிக்கன்

Boneless Chilli Chicken Recipe | நம்மில் பலருக்கும் சிக்கன் பிடிக்கும். சிக்கன் வைத்து என்ன ரெசிபி செய்தாலும் நம்மில் பலர் விரும்பி சாப்பிடுவோம். அந்தவகையில், வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி சிக்கன் செய்வது எப்படி என பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று சில்லி சிக்கன். அந்தவகையில், வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி சிக்கன் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது காரமாகவும், வாசனையாகவும், சுவையாகவும் இருப்பதால், வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 500 கிராம்.

வெங்காயம் - 1.

குடைமிளகாய் - 1.

இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்.

பச்சை மிளகாய் - 3.

சோள மாவு - 1/2 கப்.

சோயா சாஸ் - 2 கப்.

கொத்தமல்லி - 1 கொத்து.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில், ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட சிக்கனை மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு சுத்தம் செய்து. பின்னர் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

இதேப்போன்று, எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயினையும் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

இதற்கிடையில், ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாயினை காம்பு நீக்கி சேர்த்து, பேஸ்ட் போல் அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது, ஒரு மிக்ஸிங் பாத்திரத்தில் சோள மாவு, ஒரு ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, 1 ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது, சோயா சாஸ், உப்பு மற்றும் நறுக்கிய சிக்கன் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடத்திற்கு பாத்திரத்தை மூடி ஊற வைக்கவும்.

Also Read | ஒரே வாரத்தில் 5 கிலோ குறைக்கணுமா?... தினமும் வெறும் வயிற்றில் இதை குடிங்க.. நல்ல ரிசல்ட் தெரியும்!

தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும், ஊற வைத்த சிக்கன் துண்டுகளை இதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

பின்னர், மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும், அதில் வெங்காயம், குடைமிளகாய், இஞ்சிப் பூண்டு விழுது 1 ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது 1 ஸ்பூன், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.

top videos

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இதில் வறுத்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். பின்னர், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சிக்கனில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான சில்லி சிக்கன் ரெடி.

    First published:

    Tags: Chicken Recipes, Food recipes