முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட் கேரட் சூப் செய்வது எப்படி?

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட் கேரட் சூப் செய்வது எப்படி?

https://tamil.news18.com/lifestyle/food-how-to-make-rose-milk-and-rose-syrup-at-home-975229.html

https://tamil.news18.com/lifestyle/food-how-to-make-rose-milk-and-rose-syrup-at-home-975229.html

Beetroot Carrot Soup In Tamil | உங்கள் குழநதைகளை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க பீட்ரூட் கேரட் சூப் செய்து கொடுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பீட்ரூட் மற்றும் கேரட் மிகவும் ஆரோக்கியமான காய்கறி. அதனால் தான் மருத்துவர்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். அந்தவகையில், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய பீட்ரூட் மற்றும் கேரட் சூப் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேரட் - 4.

பீட்ரூட் - 1.

உப்பில்லாத வெண்ணெய் - 6 துண்டுகள்.

பட்டை - 1.

பிரியாணி இலை - 2.

வெங்காயம் - 2.

பூண்டு - 8 பற்கள்.

உப்பு - 1 தேக்கரண்டி.

மிளகு தூள் - 1 தேக்கரண்டி.

ஆலிவ் ஆயில் - 1 தேக்கரண்டி.

பிரட் துண்டுகள் - 1.

பேசில் இலை - 2.

செய்முறை :

முதலில், ரெசிப்பி செய்ய எடுத்துக்கொண்ட வெங்காயம், கேரட், பீட்ரூடை சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி தனித்தனியே வைக்கவும்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

இதையடுத்து, அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.

பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை மாறியதும் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 20 நிமிடம் வேகவிடவும்.

ALSO READ | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரோஸ் மில்க் வீட்டிலேயே செய்து கொடுக்க டிப்ஸ்..!

காய்கறிகள் நன்கு வெந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி சேர்மத்தை நன்கு ஆறவைக்கவும். சேர்மம் ஆறியதும், பட்டை, பிரியாணி இலையை நீக்கிவிட்டு ஒரு மிக்சி ஜாரில் சேர்மத்தை சேர்த்து விழுதாக அரைக்கவும்.

பின்பு கடாயில் ஊற்றி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பேசில் இலை சேர்த்து கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும்.

இப்போது ஒரு காடையை அடுப்பில் வைத்து ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

top videos

    கடைசியாக கேரட் பீட்ரூட் சூப்பில் வறுத்த பிரட் துண்டுகளை சேர்த்தால் சுவையான பீட்ரூட் கேரட் சூப் தாயார்.

    First published:

    Tags: Beetroot, Carrot Recipes, Food, Food recipes