அல்வா பிடிக்காதவர்களை பார்க்கவே முடியாது. ஏனென்றால், உலகம் முழுவதும் பல வகையான மற்றும் பல சுவைகளில் கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு பண்டங்களில் ஒன்று அல்வா.
அப்படி நீங்கள் அல்வா பிரியராக இருந்தால், உத்திரபிரதேசம் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான பனாரஸி அல்வாவினை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்.
தேவையான பொருட்கள் :
பூசணிக்காய் - 200 கிராம்.
சர்க்கரை - ½ கப்.
நெய் - ½ கப்.
பால் - 2 கப்.
பாதாம் - 1 கப்.
முந்திரி - 1 கப்.
ஏலக்காய் - 4.
பால்கோவா - ½ கப்.
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட பூசணிக்காயினை தோல், விதை நீக்கி சுத்தம் செய்து பின் சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து - தனியே எடுத்து வைக்கவும்.
தொடர்ந்து மற்றொரு மிக்ஸி ஜாரில் 1 ஸ்பூன் சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்து ஏலக்காய் பொடி தயார் செய்துக்கொள்ளவும்.
தற்போது அல்வா தயார் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து - பால் சேர்த்து காய வைக்கவும். பால் கொதி வரும் நிலையில் இதில் அரைத்து வைத்த பூசணிக்காய் விழுது சேர்த்து அடிப்பிடிக்காமல் நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
Also Read | மொறு மொறுன்னு சுவையான வெங்காய சமோசா செய்வது எப்படி..?
தற்போது மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்து சூடேற்றவும். நெய் நன்கு உறுகியதும் இதில் முந்திரி, பாதாம் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
தற்போது இதே கடாயில் மீதமிருக்கும் நெய் சேர்துத சூடேற்றவும். நெய் உறுகியதும் இதில் சர்க்கரை, பால்கோவா சேர்த்து நன்கு கிளறவும்.
தொடர்ந்து தயாராக இருக்கும் பால் - பூசணி சேர்மத்தை இதில் சேர்த்து கிளறவும். சேர்மங்கள் திடமாவதற்குள் ஏலங்காய் பொடி, வறுத்து வைத்த முந்திரி, பாதாம் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட பனாரஸி அல்வா ரெடி.
சுவையான இந்த அல்வாவினை ஒரு கோப்பையில் சேர்த்துக்கொள்ளவும். பின் இதன் மீது சிறிதளவு ஏலக்காய் பொடி தூவி சுட சுட பரிமாறவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Food recipes