முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடலில் உள்ள எல்லா நோய்களுக்கும் இந்த ஒரு டீ போதும்… எப்படி தயாரிப்பது?

உடலில் உள்ள எல்லா நோய்களுக்கும் இந்த ஒரு டீ போதும்… எப்படி தயாரிப்பது?

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் ‘வாழைப்பழ டீ’!

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் ‘வாழைப்பழ டீ’!

வாழைப்பழ டீ-யில் வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் ஆகியவை நிறைந்துள்ளன. இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய பானங்களில் ஒன்று.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வாழைப் பழ தேநீர் என்பது வாழைப் பழம், வெந்நீர், இலவங்கப்பட்டை மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் அற்புதமான பணம். வாழைப்பழ டீ-யை தோலுடனும், தோல் இல்லாமலும் தயாரிக்கலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. புற்றுநோய், தூக்கமின்மை, இதய நோய், நீரிழிவு என பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. வாருங்கள் வாழைப்பழ டீ எப்படி தயாரிப்பது, அதன் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

தோல் இல்லாமல் வாழைப்பழ டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் 2-3 கப் (500-750 மில்லி) தண்ணீரை நிரப்பி கொதிக்க வைக்கவும்.  இப்போது, ஒரு வாழைப் பழத்தை தோலுரித்து இரு முனைகளையும் நறுக்கவும். தோலுரித்த வாழைப் பழத்தை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து, 5 -10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.  தேவைப்பட்டால் இதனுடன் இலவங்கப்பட்டை அல்லது தேன் சேர்க்கலாம். இப்போது, வாழைப் பழத்தை அகற்றி, மீதமுள்ள திரவத்தை வடிகட்டினால் வாழைப்பழ டீ தயார்.

வாழைப் பழத் தோல் டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் 2-3 கப் (500-750 மில்லி) தண்ணீரை நிரப்பி கொதிக்க வைக்கவும்.  வாழைப்பழத்தை நன்றாக சுத்தம் செய்யவும். இதன் பின், வாழைப் பழத்தின் தோலை மட்டும் தனியாக உரித்து எடுக்கவும். இப்போது தோலின் இரு முனைகளையும் நீக்கவும்.  வாழைப்பழத் தோலை கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

அடுப்பை சிம்மில் வைத்து, 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

தேவைப்பட்டால் இதனுடன் இலவங்கப்பட்டை அல்லது தேன் சேர்க்கலாம். இப்போது, வாழைப்பழத் தோலை அகற்றி, மீதமுள்ள திரவத்தை வடிகட்டினால் வாழைப்பழ டீ தயார். மீதம் உள்ள டீயை 1-2 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பருகலாம்.

பயன்கள் :

இதய ஆரோக்கியம் : அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட வாழைப்பழம் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த தேநீர், இரத்த நாளத்தில் தேங்கும் கொழுப்புகளை கரைத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. அந்த வகையில் இந்த தேநீர் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

Also read | சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றபடி செய்ய கேழ்வரகு மசாலா ரொட்டி.. 

​நீரிழிவு பிரச்சனைக்கு : வாழைப் பழத்தில் காணப்படும் குறைந்த அளவு சர்க்கரை, அதனை கொதிக்க வைக்கும் போது வெளிப்படுகிறது. மேலும் இந்த இயற்கை சர்க்கரை, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து சர்க்கரை நோயாளிகளை காக்கிறது.

​புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் : வாழைப்பழ தேநீரில் காணப்படும் டோபமைன், கேலோகேடசின் போன்ற கரையக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.

top videos

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : வாழைப்பழ தேநீரில் வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இவை, நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கிருமி தொற்றில் இருந்து காக்கிறது.

    First published:

    Tags: Banana, Diabetes, Weight loss