முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையா..? இந்த ஷேக் குடிச்சு பாருங்க..!

என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையா..? இந்த ஷேக் குடிச்சு பாருங்க..!

சரியான உடல் எடையை பெற ஷேக் குடிங்க

சரியான உடல் எடையை பெற ஷேக் குடிங்க

Banana Date Milkshake Recipe in Tamil | நம்மில் பலர் உடல் எடையை குறைக்க முயற்சிப்போம். இன்னும் சிலர், உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்போம். வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் பானம் இந்த இரண்டு பிரச்சினைக்கும் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா?.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பானம். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள்.

அதே நேரம் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு இரண்டுக்கும் வாழைப்பழம் நல்ல உதவும். அந்தவகையில், வாழைப்பழம் பேரீட்சைப்பழ வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் - 3.

பேரீட்சைப்பழம் - 10.

பாதாம் - 5 பருப்பு.

முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர்.

சர்க்கரை - 2 ஸ்பூன்.

வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி (தேவைப்பட்டால்).

ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை :

வாழைப்பழம் பேரீட்சைப்பழ மில்க் ஷேக் செய்ய, முதல் நாள் இரவே பாதாமை தண்ணீரில் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

முதல், வாழைப்பழத்தை தோல் நிக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

இதையடுத்து, எடுத்து வைத்துள்ள பேரிச்சம் பழத்தை விதை நிக்கி எடுத்துக்கொள்ளவும்.

Also Read | உங்க குழந்தை ரொம்ப ஒல்லியா இருக்கா..? அப்போ இந்த ஊட்டச்சத்து நிறைந்த லட்டுவை கொடுங்க..!

ஊறவைத்த பாதாமை தோல் நிக்கி எடுத்துக்கொள்ளவும்.

இதை தொடர்ந்து, மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், பேரிச்சம் பழம், பாதாம், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, காய்ச்சிய பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்தால் வாழைப்பழம் பேரீட்சைப்பழ மில்க் ஷேக் ரெடி.

top videos

    ஒரு கண்ணாடி டாம்ப்ளேரில் ஊற்றி அதின் மேல் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி பரிமாறலாம்.

    First published:

    Tags: Banana, Dates, Weight gain, Weight loss