முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெறும் 2 வாழைப்பழம் இருந்தா போதும் குழந்தைகளுக்கு பிடித்த வாழைப்பழ கேக் செய்யலாம்..!

வெறும் 2 வாழைப்பழம் இருந்தா போதும் குழந்தைகளுக்கு பிடித்த வாழைப்பழ கேக் செய்யலாம்..!

இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான பனானா கேக்!!

இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான பனானா கேக்!!

வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்க கூடிய பழங்களில் ஒன்று. அதே போல இதில் ஆரோக்கிய நன்மைகளும் அதிகம் உள்ளது. குழந்தைகள் விரும்பி உண்ணும் வாழைப்பழ கேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலருக்கும் வாழைப்பழம் பிடிக்கும். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், மருத்துவமனை பக்கமே போக தேவையில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால், வாழைப்பழத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

அந்தவகையில், வாழைப்பழத்தை வைத்து எளிமையான முறையில் வீட்டிலேயே வாழைப்பழ கேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் - 2.

முட்டை - 2.

சர்க்கரை - ½ கப்.

பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்.

லவங்கப் பொடி - 1 ஸ்பூன்.

மைதா - 1 கப்.

முந்திரி - 2 ஸ்பூன்.

சமையல் எண்ணெய் - ½ கப்.

செய்முறை :

முதலில் கேக் செய்ய எடுத்துக்கொண்ட மைதா மாவினை ஒரு சல்லடை கொண்டு சலித்து - தூசி நீக்கி தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

பின், இதனுடன் சர்கரை, கேங்கிங் பவுடர், லவங்கப் பொடி, ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.

இதை தொடர்ந்து, இதில் முட்டையை சேர்க்கவும். அதேநேரம் வாழைப்பழத்தையும் நன்கு மசித்து சேர்த்து பிசைந்துக்கொள்ள கேக்கிற்கான சேர்மம் தயார்.

இதனிடையே கேக் தயார் செய்ய பயன்படுத்தும் ஓவனை 180° செல்சியஸ் வெப்பநிலையில் 10 - 15 நிமிடத்திற்கு Preheat செய்து வைக்கவும்.

Also Read | கொளுத்தும் வெயிலுக்கு இதமான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி..?

இப்போது, பேக்கிங் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் எண்ணெய் தேய்த்து, தயாராக உள்ள கேக் சேர்மத்தை சேர்க்கவும். இதையடுத்து, அதன் மீது முந்திரியை துருவி சேர்க்கவும்.

தற்போது தயாராக உள்ள இந்த பாத்திரத்தை ஓவனில் வைத்து 186° டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 25 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்க சுவையான பனானா கேக் ரெடி.

ஓவன் இல்லாதவர்கள் குக்கரில் மண் சேர்த்து, அதன் மீது சேர்மம் ஊற்றிய கிண்ணத்தை வைத்து 30 நிமிடம் கழித்து எடுக்க சுவையான பனானா கேக் தயார்.

top videos

    முறையாக தயார் செய்த இந்த கேக் சூடு ஆறும் வரை காத்திருக்கவும். பின் சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். இதை குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆகவும் கொடுக்கலாம்.

    First published:

    Tags: Banana, Food, Food recipes