முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மொறு மொறுன்னு பஞ்சாப் ஸ்டைல் மச்சிலி ஃபிஷ் ப்ரை செய்யலாமா..? இதோ ரெசிபி...

மொறு மொறுன்னு பஞ்சாப் ஸ்டைல் மச்சிலி ஃபிஷ் ப்ரை செய்யலாமா..? இதோ ரெசிபி...

பஞ்சாப் ஸ்டைல் மச்சிலி மீன் ப்ரை செய்வது எப்படி?

பஞ்சாப் ஸ்டைல் மச்சிலி மீன் ப்ரை செய்வது எப்படி?

How to make Amritsari Fish Fry Recipe : இந்த முறை உங்கள் குடும்பத்தினருக்கு மீன் ப்ரையை இப்படி செய்து பரிமாறுங்கள். அவங்க வாயடச்சு போயிருவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன், முட்டை, மட்டன் மற்றும் மீன் கட்டாயம் பிடிக்கும். சிலருக்கு சிக்கன் மட்டனை விட மீன் பிடிக்கும். மற்ற அசைவ உணவுப்பொருட்களை விட மீனில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முடி, தோல், இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம், கண்கள் போன்றவற்றுக்கு மீன் மிகவும் நல்லது.

உங்களுக்கு மீன் பிடிக்கும் என்றால் இந்த தொகுப்பு உங்களுக்கானது. ஏனென்றால், நாங்கள் மீன் வைத்து செய்யக்கூடிய ஒரு புது ரெசிபி பற்றி கூறுகிறோம். அதாவது பஞ்சாப் மாநில மக்கள் விரும்பி சாப்பிடும் மீன் ப்ரை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மீன் - 1 கிலோ.

கடலை மாவு - 1 கப்.

கரம் மசாலா - 2 ஸ்பூன்.

சீரக பொடி - 2 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

மஞ்சள் - 1 ஸ்பூன்.

எலுமிச்சை - 1.

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட மீனை நன்கு சுத்தம் செய்து, வேண்டிய அளவில் நறுக்கி, உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

இதை தொடர்ந்து மிக்சிங் கோப்பை ஒன்றை எடுத்து அதில் கடலை மாவு, கரம் மசாலா, சீரக பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர், இதனுடன் போதுமான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

இதையடுத்து, எடுத்து வைத்துள்ள எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, சாறு புழிந்து தேவையான அளவு இந்த மாவு கலவையில் சேர்த்து மீண்டும் நன்கு கரைத்துக்கொள்ள மசாலா கலவை தயார்.

Also Read | மீன் குழம்பு செஞ்சிருப்பீங்க.. ஆனால் மீன் குருமா செஞ்சிருக்கீங்களா..? இதோ ரெசிபி..!

தற்போது மீனை வறுத்து எடுக்க, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும், தயாராக வைத்துள்ள மீனை மசலா கலவையில் முக்கி எடுத்து எண்ணையில் சேர்த்து பொன்னிறமாக வறுக்க அம்ரிஸ்டரி மச்சிலி மீன் வறுவல் தயார்.

top videos

    சுவையான இந்த அம்ரிஸ்டரி மச்சிலியினை ஒரு தட்டில் வைத்து, அதன் மீது சிறிதளவு மிளகு தூள், எலுமிச்சை சாறு பிழிந்து சுட சுட பிரமாறலாம். இது சாதாரணமான மீன் வறுவலை போல அல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

    First published:

    Tags: Fish Finger Recipe in Tamil, Fish Fry, Food recipes