முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளைத் தாக்கும் கோடைக்கால நோய்களும், சிகிச்சை முறைகளும்!

குழந்தைகளைத் தாக்கும் கோடைக்கால நோய்களும், சிகிச்சை முறைகளும்!

மாதிரி படம்

மாதிரி படம்

கோடைக்காலத்தில் தான் ஒரு மாத காலம் அளவிற்கு உங்களது குழந்தைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். எனவே இந்த நேரத்தில் உங்களது குழந்தைகளை காலையில் விளையாட அனுமதியுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர்காலங்கள் மட்டுமில்லை, சுட்டெரிக்கும் கோடைக்காலத்திலும் நம்முடைய குழந்தைகள் பல நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இன்றைக்கு குழந்தைகளைத் தாக்கும் பொதுவான கோடைக்கால நோய்கள் மற்றும் அவற்றின் சிகிச்சை முறைகள் குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்..

தொண்டையில் அழற்சி: கோடைக்காலத்தில் குழந்தைகளைப் பாதிக்கும் பாக்டீரியா தொற்று தான் தொண்டை அழற்சி. இதனால் குழந்தைகளுக்கு தொண்டையில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. 5 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு ஸ்ட்ரெப் தொண்டை பாதிப்பு ஏற்படுவது பொதுவானது.

அறிகுறிகள் : குழந்தைகளுக்கு திடீர் காய்ச்சல், தலைவலி, குளிர் மற்றும் எதையும் சாப்பிட முடியாமல் சிரமப்படுவது, தொண்டை சிவப்பு நிறமாகுதல் போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளது

சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்: இதுபோன்ற அறிகுறிகள் இருப்பதைக் கண்டறிந்தால், மருத்துவர்களின் அறிவுரையின் படி பென்சிலின் மற்றும் அமோக்சிலின் போன்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும். ஆன்டிபயாடிக்கை நீங்கள் தொடர்ச்சியாக ஒரு 2 நாள்களுக்காவது கொடுக்க வேண்டும். மேலும் மிதமான சூடு தண்ணீரில் உப்பு சேர்த்து வாய்க்கொப்பளிப்பது, சூடான தண்ணீர் குடிப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

ஃபுட் பாய்சனிங் : கோடைக்காலத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் பிடித்த உணவுகளை பெரும்பாலும் சாப்பிடுவார்கள். சில உணவுகளால் அவர்களுக்கு புட் பாய்சனிங் ஏற்படக்கூடும். இதனால் வாந்தி, வயிற்று பிரச்சனை ஏற்படக்கூடும். சில சமயங்களில் காய்ச்சலும் ஏற்படக்கூடும். இது குழந்தைகளை சில மணி நேரத்திற்கு உள்ளேயே மிகவும் சோம்பலாக்கிவிடுகிறது.

சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்: பிடிக்காத உணவுகள் மற்றும் வீணா உணவுகளை சாப்பிட்டு உங்களது குழந்தைகளுக்கு புட் பாய்சனிங் ஏற்பட்டால், அவர்கள் மிகவும் சோம்பலாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே ஓஆர்எஸ் எனப்படும் டீஹைட்ரேஷன் கரைசலை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஒருவேளை வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

மேலும் இந்த பாதிப்பை நீங்கள் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், சாலையோர வியாபாரிகளிடத்தில் சாப்பிடுவதை நீங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

எக்ஸிமா: குழந்தைகளுக்கு தோல் அழற்சி ஏற்படுவது கோடைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றாகும். குறிப்பான கோடைக்காலத்தில் நாம் குளோரின் கலந்த நீரில் அடிக்கடி குளிப்பது, அதிக வெப்பம் மற்றும் சில சன்ஸ்கிரீன்களை நீங்கள் உபயோகிக்கும் போது குழந்தைகளுக்கு சருமம் வருண்டு விடுவதோடு அவர்களுக்கு தோல் அழற்சி ஏற்படும்.

அறிகுறிகள்: கழுத்து, முகம், கைகள் மற்றும் கால்களில் அரிப்பு, வறண்ட சருமத்தின் திட்டுகள் காணப்படும். சிலருக்கு வறண்ட சருமத்தால் மற்றும் உணவுகள் ஒவ்வாமையின் காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.

சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்: அரிக்கும் தோலழற்சி உள்ள குழந்தைகள் குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். மேலும் ஈரப்பதமூட்டும் சோப்புகளைப் பயன்படுத்துங்கள். மேலும் உங்களது தோலை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க, சரும மாய்ஸ்சரைசர்களை, குறிப்பாக திரவ மற்றும் மென்மையான வெள்ளை பாரஃபின் கொண்ட எண்ணெய் தயாரிப்புகளை முடிந்தவரை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

இதுப்போன்ற பாதிப்புகள் உங்களுக்கு ஏற்படும் பட்சத்தில், நீங்கள் ஸ்டீராய்டு கிரீம்கள் மற்றும் பாரஃபின் காஸ் (paraffin gauze) ஆடைகள் உதவியாக இருக்கும். தோலழற்சி உள்ள குழந்தைகள் தங்கள் நகங்களை தவறாமல் வெட்ட வேண்டும், ஏனெனில் அரிப்பு இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும் மற்றும் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கும். இதோடு மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் கடினம்.

இந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள்மாய்ஸ்சரைசர்களைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் சன்ஸ்கிரீன் லோஷன்களை கவனமாகத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் குழந்தைகளில் அரிக்கும் தோலழற்சியைக் கட்டுப்படுத்தலாம். நீங்கள் தோல் கிரீம்களை வாங்குவதற்கு முன்னதாக குழந்தை மருத்துவர்களின் ஆலோசனைக் கேட்பது நல்லது.

கோடை காலத்தில் உங்களது குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய வழிமுறைகள்: கோடைக்காலத்தில் தான் ஒரு மாத காலம் அளவிற்கு உங்களது குழந்தைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். எனவே இந்த நேரத்தில் உங்களது குழந்தைகளை காலையில் விளையாட அனுமதியுங்கள். அல்லது வெப்பம் தணிந்தவுடன் வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவதற்கு அனுமதிக்கவும். ஒருவேளை உங்களது குழந்தைகள் வெயிலில் விளையாட நினைத்தால், வியர்வையை உறிஞ்சும் ஆடைகளை அணிய வேண்டும்;

உங்கள் பிள்ளைகள் நீச்சல் பழகுவதற்கு செல்கிறார்கள் என்றால், நீந்திய பிறகு அவளுடைய காதுகளை நன்கு சுத்தம் செய்து உலர வைக்கவும்.

top videos

    உங்கள் குழந்தை எதையும் சாப்பிடும் முன் கைகளை கழுவும்படி கற்றுக்கொடுக்கவும். முகம் மற்றும் கண்களைத் தேவையில்லாமல் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். மீண்டும், அவ்வப்போது கைகளை கழுவுவது முக்கியம்.

    First published:

    Tags: Summer Heat, Summer tips