முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொள்ளு கஞ்சியை இனி குதிரை வாலி அரிசியுடன் சேர்த்து செஞ்சு பாருங்க..

கொள்ளு கஞ்சியை இனி குதிரை வாலி அரிசியுடன் சேர்த்து செஞ்சு பாருங்க..

கொள்ளு கஞ்சியை இனி குதிரை வாலி

கொள்ளு கஞ்சியை இனி குதிரை வாலி

horse gram-Kuthiraivali rice Kanji | கொள்ள்ளை ஊறவைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து அந்த நீரை வடித்து லேசாக காய்ச்சி வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடைக்காலம் தொடங்கி விட்டது. அதனால் எப்போது காலை உணவாக இட்லி, தோசை, பூரி என்று இல்லாமல் உடலுக்கு வலுவை தரும் கொள்ளு கஞ்சி வைத்து சாப்பிட்டு பாருங்கள்... அதனுடன் சிறுதானியமான குதிரைவாலி அரிசியையும் சேர்த்து சமைத்து பாருங்கள்.. சுவை அலாதியாக இருக்கும். உடலில் அதிகப்படியாக இருக்கும் கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது கொள்ளு.  கொள்ளுவை வைத்து சத்தான கஞ்சி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளாலாம்.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 1 கப்

கொள்ளு - அரை கப்

உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை :

1. முதலில் கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து நீரில் மூழ்கும் வரைப் போட்டு 2 மணி நேரம் ஊறவிடவும்.

2. பின்னர் குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் அதை குக்கரில் போட்டு அதனுடன் கொள்ளுவை போட்டு மூழ்கும் அளவிற்கு மேல் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்க வேண் டும்.

3. இந்த கலவையை நன்றாக  வேக விடவும். அவை நன்கு குழைய வெந்ததும் அதில் கடைந்து அடுப்பில் வைத்து மேலும் நீர் சேர்த்து கிளறிவிட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

4. இப்போது சூப்பரான குதிரைவாலி கொள்ளு கஞ்சி ரெடி.

top videos

    5. இது ஒரு ஆரோக்கிய உணவு. காலை மற்றும் இரவு உணவாக சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். தேவையில்லாத கொழுப்பை நீக்கி உடம்பை குறைக்க வைக்கும் தன்மை கொண்டது இந்த கஞ்சி

    First published:

    Tags: Food, Millet Recipes