முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பிரபலமாகும் ஹூக்ளி வெள்ளை பூந்தி.. எப்படி செய்வது?

பிரபலமாகும் ஹூக்ளி வெள்ளை பூந்தி.. எப்படி செய்வது?

வெள்ளை பூந்தி

வெள்ளை பூந்தி

Kamarpukur boondi | இந்த பூந்தியை வாங்குவதற்காக மக்கள் தொலைதூரங்களில் இருந்து வந்து செல்கின்றனர்

  • Last Updated :
  • West Bengal, India

மேற்கு வங்கத்தின் ஹுக்ளி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வெள்ளை பூந்திக்கு தனி சிறப்புகள் உண்டு. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு மிகவும் பிரியமான இந்த வெள்ளை பூந்தி கமர்புகூரில் மிகவும் பாரம்பரியமானதாக கருதப்படுகிறது.

இந்த பூந்தியை வாங்குவதற்காக மக்கள் தொலைதூரங்களில் இருந்து வந்து செல்கின்றனர். கமர்புகூரில் நடைபெறும் விழாக்கள், திருமணங்கள் போன்ற விஷேசங்களில் நிச்சயமாக இந்த வெள்ளை பூந்தி இடம்பெற்றிருக்கும். அப்படிப்பட்ட இந்த வெள்ளை பூந்தியை வேறு எங்கும் கண்டிட முடியாது.

இந்த தனிச்சிறப்புடைய பூந்தியை எப்படி தயாரிக்கிறார்கள்:

கடலை மாவு மற்றும் அரிசி மாவில் மட்டுமே இந்த பூந்தி தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ கடலை மாவுடன் 3 கிலோ அரிசி மாவு சேர்த்து பேஸ்ட்டை தயாரித்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பேஸ்ட் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் வறுக்கப்படுகிறது. பிறகு 45 நிமிடங்கள் இனிப்பு சாற்றில் ஊறவைக்கப்படுவதாக பூந்தி தயாரிப்பாளர் தெரிவிக்கிறார்.

top videos
    First published:

    Tags: Food, Food recipes