முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தித்திப்பான தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி?

தித்திப்பான தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி?

தேன் நெல்லிக்காய்

தேன் நெல்லிக்காய்

Honey Amla | தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு தேன் நெல்லிகளை சாப்பிட்டால் உடலில் பல அற்புதங்களை உணரலாம்.

  • Last Updated :

தேன் நெல்லிக்காய் ஆறுமாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதை அனைவரும் சாப்பிடலாம் என்பதால் கிலோ கணக்கில் செய்து வைத்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் - 1 கிலோ

சுத்தமான் தேன் - 1 கிலோ (தேவைக்கேற்ப கூடுதலாகவும் பயன்படுத்தலாம்)

கண்ணாடி அல்லது மூடியிட்ட பீங்கான் ஜாடி

செய்முறை

1. நெல்லிக்காயை சுத்தமாக கழுவி தண்ணியில்லாமல் வடிக்க வேண்டும். பிறகு அதை இட்லி பானையில் இலேசாக வேக வைத்து எடுக்கவும். நன்றாக வேக வேண்டும் என்றில்லை. பாதி அதன் தோல் மிருதுவானால் போதுமானது.

2. பிறகு நெல்லிக்காயை கொட்டையில்லாமல் நீள்வாக்கில் வெட்டி இலேசாக தட்டில் பரப்பி வைக்கவும். இப்போது சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் இரண்டு தேக்கரண்டி விட்டு நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை ஒரு கை போட்டு குலுக்கவும்.

3. மீண்டும் தேன் மீண்டும் நெல்லிக்காய் துண்டுகள் என்று மாறி மாறி சேர்த்து நன்றாக குலுக்கி இறுதியாக எஞ்சியிருக்கும் தேனை முழுவதுமாக ஊற்றி பாட்டிலை நன்றாக குலுக்கி வெயிலில் வைத்து எடுக்கவும்.

4. அப்படியே தேனோடு வைத்து பாட்டிலிலேயே ஒரு வாரம் வரை வெயிலில் வைத்து எடுக்கலாம்.

5. அல்லது கடையில் விற்பது போல் வேண்டுமெனில் இரண்டு நாட்கள் வெயிலில் வைத்தபிறகு நெல்லிக்காயை வெளியில் எடுத்து தட்டில் கொட்டி காயவைத்து மீண்டும் இரவு நேரத்தில் தேனில் ஊறவைக்கவும்.

6.இதே போல் காலையில் வெயிலிலும் இரவு தேனிலும் ஊறவைத்து எடுத்தால் தேன் நெல்லி தயார். மீதியிருக்கும் தேன் நெல்லி சாறை தனியாக பாட்டிலில் வைத்து குழந்தைகளுக்கு இருமல் வரும் போது டானிக் போன்று பயன்படுத்தலாம்.

7. தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் துண்டுகளை தினமும் சாப்பிட்டுவந்தால் கண் கோளாறு வராமல் தடுக்கும்.

top videos

    8.வளரும் குழந்தைகளுக்கு தினம் இரண்டு தேன் நெல்லி கொடுத்து வந்தால் கண் பிரச்சனை , பார்வை குறைபாடு நேராமல் இருப்பார்கள்.

    First published:

    Tags: Amla, Honey