முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உணவில் காரம் போதவில்லையா..? நொடியில் கார சுவையை கொண்டு வர இந்த எண்ணெய் தயார் செஞ்சு வச்சுக்கோங்க..!

உணவில் காரம் போதவில்லையா..? நொடியில் கார சுவையை கொண்டு வர இந்த எண்ணெய் தயார் செஞ்சு வச்சுக்கோங்க..!

மிளகாய் எண்ணெய்

மிளகாய் எண்ணெய்

இதை கடையில் வாங்குவது என்றால் சற்று கூடுதல் விலைதான். ஆனால் இதை வீட்டில் செய்தால் 10 ரூபாய் கூட தாண்டாது. நம் கிட்சனில் இருக்கும் பொருட்களே போதுமானது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காரமான உணவை விரும்பி சாப்பிடுவோருக்கு இந்த மிளகாய் எண்ணெய் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கக்கூடும். இது சீனர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. இது இத்தாலியன் வகை உணவுகளிலும் சேர்க்கப்படும். இதை கடையில் வாங்குவது என்றால் சற்று கூடுதல் விலைதான். ஆனால் இதை வீட்டில் செய்தால் 10 ரூபாய் கூட தாண்டாது. நம் கிட்சனில் இருக்கும் பொருட்களே போதுமானது. சரி எப்படி மிளகாய் எண்ணெய் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • காஷ்மீரி மிளகாய் - 10
  • காய்ந்த மிளகாய் - 10
  • வறுத்த பூண்டு - 6
  • வறுத்த வெங்காயம் - 2 ஸ்பூன்
  • உப்பு - 1 ஸ்பூன்
  • சர்க்கரை - 1 1/2 ஸ்பூன்
  • அன்னாசி பூ - 2
  • மிளகு - 3
  • சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
  • சூடான எண்ணெய் - 1/2 கப்

top videos

    செய்முறை :

    மிளகாய்கள் மொறுமொறுவென வருமாறு நன்கு வறுத்துத்துக்கொள்ளுங்கள். அதேபோல் பூண்டு , வெங்காயத்தை எண்ணெயில் வறுத்துக்கொள்ளுங்கள்,
    இப்போது மிக்ஸி ஜாரில் மிளகாய், பூண்டு, வெங்காயம், சர்க்கரை, உப்பு சேர்த்து கரடுமுரடாக அரைத்துக்கொள்ளுங்கள்.
    பின் அந்த கலவையை கிண்ணத்தில் மாற்றுங்கள். அதில் அன்னாசி பூ, சோயா சாஸ், மிளகு மற்றும் காய்ச்சி வைத்துள்ள சூடான எண்ணெய்யும் அதில் ஊற்றுங்கள்.
    அதை நன்றாக மிக்ஸ் செய்தால் காரமான மிளகாய் எண்ணெய் தயார்.
    இதை ரெசிபிகளின் மேல் தூவுவது, சால்டுகளில் தூவுவது, சாட் உணவுகளுக்கு தொட்டுக்கொள்வது என பயன்படுத்திக்கொள்ளலாம்.
    First published:

    Tags: Chilli, Cooking Oil