முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தொண்டை கரகரப்பை சரி செய்யும் அகத்திக்கீரை சூப்... இதோ ரெசிபி

தொண்டை கரகரப்பை சரி செய்யும் அகத்திக்கீரை சூப்... இதோ ரெசிபி

agathi keerai soup | காய்ச்சல் போன்ற நேரத்தில் அகத்திக்கீரை சூப் குடிப்பது மிகவும் நல்லது...

agathi keerai soup | காய்ச்சல் போன்ற நேரத்தில் அகத்திக்கீரை சூப் குடிப்பது மிகவும் நல்லது...

agathi keerai soup | காய்ச்சல் போன்ற நேரத்தில் அகத்திக்கீரை சூப் குடிப்பது மிகவும் நல்லது...

  • Last Updated :

அகத்திக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக குடல் புண், குடல் எரிச்சல் போன்றவை இல்லாமல் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. உடல் சூட்டை தனிக்கவும் உதவுகிறது. காய்ச்சல் போன்ற நேரத்தில் அகத்திக்கீரை சூப் குடிப்பது மிகவும் நல்லது.

அந்த நேரத்தில் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை வீக்கம், புண் இருந்தால் சரியாகும். தோல் பிரச்னைகளுக்கும் அகத்திக்கீரை நல்ல மருந்து. எனவே இதில் சூப் வைத்துக் குடிப்பது மிகவும் நல்லது. இருப்பினும் சிலர் இதன் கசப்புத் தன்மை காரணமாக செய்ய மாட்டார்கள். கசப்பே தெரியாமல் எப்படி வைப்பது என தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

அகத்தி கீரை – 1 கப்

நல்லெண்ணெய் – 2 tbsp

மிளகு தூள் – 1 tsp

பூண்டு – 4

சீரகம் – tsp

மஞ்சள் தூள் – 1/4 tsp

தேங்காய் - 1/2 மூடி

வெங்காயம் – 1

தக்காளி – 1

உப்பு – தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் மிளகு , பூண்டு, சீரகம், வெங்காயம், மஞ்சள் தூள், தக்காளி ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

தேங்காய் பால் தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கீரைக்கு தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு சூடேறி கொதித்து வரும்போது அகத்திக்கீரையை சேர்த்து கிளறிவிடவும்.

அரைத்த மசாலாவை சேர்த்து கலந்துவிடவும். அது கொதித்து வரும்போது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பின் தட்டுபோட்டு மூடி 5-6 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். 6 நிமிடங்கள் கழித்து கீரை வெந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

இறுதியாக 15 நிமிடங்கள் கழித்து ஒரு பவுலில் சூப் ஊற்றி அதில் நல்லெண்ணெய் மற்றும் உப்பு கலந்து குடிக்க வேண்டும்.

top videos

    அவ்வளவுதான் சுவையான சூடான அகத்திக்கீரை சூப் தயார்.

    First published:

    Tags: Soup, Spinach