முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெயிலுக்கு குளுர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்.. இதோ ரெசிபி..!

வெயிலுக்கு குளுர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்.. இதோ ரெசிபி..!

ராகி கூழ்

ராகி கூழ்

Ragi Koozh | சத்தான கேழ்வரகு கூழ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க அதற்கேற்பதான் நம் உணவு முறைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் கேழ்வரகு வெயில் சூட்டை தணிக்கும் ஆற்றல் கொண்டது. எனவேதான் கிராமத்தில் வயல்களில் உழைக்கும் மக்கள் வெயில் காலத்தில் கேழ்வரகு கூழை பிரதான உணவாக உட்கொள்வார்கள். நீங்களும் இதை குடிக்க விரும்பினால் வீட்டிலேயே செய்து சாபிடலாம்.

தேவையான பொருட்கள் :

ராகி - 1 கப்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 5 1/2 கப்

வரகு அரிசி - 1/4 கப்

தயிர் - 1/2 கப்

செய்முறை

1. முதலில் ராகி மாவை மூன்று கப் தண்ணீர் கலந்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

2. மறுநாள் ராகி மாவு நன்கு ஊறியிருக்கும். அதுதான் கூழின் சுவைக்குக் காரணம்.

3. அதை குக்கரில் அப்படியே தண்ணீரோடு மாற்றுங்கள். அதில் வரகு அரிசி , தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

4. அத்துடன் 2 கப் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். கரண்டியை வைத்து நன்குக் கலக்க வேண்டும். இப்போது குக்கரை மூடிவிடுங்கள்.

5. குறைந்த தீயில் மூன்று விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள். பிரெஷர் முற்றிலும் இறங்கியதும் விசிலை நீக்கிவிட்டு குக்கரைத் திறக்க வேண்டும்.

6. தற்போது மத்து வைத்து நன்கு மசிக்க வேண்டும்.  அதேசமயம் தயிர் சேர்த்து மீண்டும் மத்தில் கடைந்து நன்றாக கலக்குங்கள்.

7. கூழ் கட்டியாக இருந்தால் மோர் சேர்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதில் வெங்காயமும் சேர்த்துக்கொள்ளலாம்.

8. இதற்கு சைட்டிஷாக ஊறுகாய், மோர் மிளகாய், வடகம் பொருத்தமாக இருக்கும்.

First published:

Tags: Millets Food