முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இனி முள்ளங்கியை இப்படி செய்யுங்க… எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!

இனி முள்ளங்கியை இப்படி செய்யுங்க… எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!

இட்லி, தோசைக்கு ஏற்ற முள்ளங்கி சட்னி செய்வது எப்படி?

இட்லி, தோசைக்கு ஏற்ற முள்ளங்கி சட்னி செய்வது எப்படி?

இட்லி மற்றும் தோசைக்கு எப்பவும் போல சட்னி, சாம்பார் என வைக்காமல் ஒரு முறை முள்ளங்கி வைத்து இப்படி சட்னி செய்து கொடுங்க. உங்க குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் நம்மில் பலருக்கு பிடிக்காது. முள்ளங்கியை சாம்பாரில் சேர்த்தால் கூட அவற்றை தனியாக எடுத்துவைப்பவர்கள் நமது குடும்பத்தில் உள்ளனர். ஆனால், முள்ளங்கியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன மற்றும் இதய நோய்க்கான அபாயத்தையும் குறைக்கிறது.

எனவே, முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். முள்ளங்கி பிடிக்காதவர்களையும் முள்ளங்கியை சாப்பிடவைக்கும் அளவுக்கு ஒரு சூப்பர் ரெசிபி பற்றி நாங்கள் கூறுகிறோம். இட்லி, தோசை மற்றும் சாதம் என அனைத்து விதமான உணவுக்கும் தொட்டுக்கொள்ள உதவும் ஆரோக்கியமான முள்ளங்கி சட்னியை எளிய முறையில் செய்வது எப்படி என காணலாம்.

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி - 2.

நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்.

வரமிளகாய் - 10.

மல்லி விதை - 1 ஸ்பூன்.

சீரகம் 1/2 ஸ்பூன்.

சின்ன வெங்காயம் - 10.

பூண்டு - 6 பல்.

இஞ்சி - சிறிதளவு.

புளி - நெல்லிக்காய் அளவு.

கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1 கொத்து.

செய்முறை :

முதலில் சட்னி செய்ய எடுத்துக்கொண்ட முள்ளங்கியினை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் நீங்கி, சிறிய துண்டுகளாக வெட்டி தயாராக வைத்துக்கொள்ளவும். அதேநேரம், சட்னிக்கு தேவையான பொருட்களையும் தயார் படுத்திக்கொள்ளவும்.

தற்போது அடுப்பில் ஒரு கடாயினை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் வரமிளகாய், மல்லி விதை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து தனியே எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில், சிறிதளவு எண்ணெய் சேர்த்து முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புளி மற்றும் உப்பு ஆகியவைற்ற நன்கு வதக்கிக்கொள்ளவும்.

Also Read | உலக இட்லி தினம் 2023 : குழந்தைகளுக்கு பிடித்த வெஜிடபிள் இட்லி எப்படி செய்வது..!

பின்னர் இந்த சேர்மத்தை நன்கு ஆறவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். அரைத்து எடுக்கப்படும் இந்த சேர்மம் துவையலுக்கு ஏற்ற பதத்தில் இருக்க வேண்டும்.

இதேப்போன்று, முன்னதாக நாம் வறுத்து வைத்த மசாலா பொருட்களையும் (வரமிளகாய், மல்லி விதை, சீரகம்) தனியே தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, அதனை முள்ளங்கி சேர்மத்துடன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

தற்போது இந்த துவையலுக்கு தாளிப்பு சேர்க, ஒரு தாளிப்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். பின்னர் அதில், கடுகு, வெங்காயம், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து எடுத்துக்கொள்ளவும்

இந்த தாளிப்பினை அரைத்து தனியே தயாராக வைத்துள்ள முள்ளங்கி சேர்மத்துடன் கிளறிவிட, சுவையான முள்ளங்கி சட்னி ரெடி. இந்த சட்னியை இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சுடசுட பரிமாற வேண்டியது தான்.

First published:

Tags: Food, Food recipes