முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வீட்டிலேயே செய்யலாம் தித்திக்கும் அன்னாசி அல்வா - இதோ ரெசிபி!

வீட்டிலேயே செய்யலாம் தித்திக்கும் அன்னாசி அல்வா - இதோ ரெசிபி!

10 நிமிடம் இருந்தால் போதும் சூப்பரான அன்னாசி அல்வா ரெடி!

10 நிமிடம் இருந்தால் போதும் சூப்பரான அன்னாசி அல்வா ரெடி!

அன்னாசிப்பழத்தில் உள்ள செரிமான நொதியான Bromelain, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது. உங்களுக்கு சைனசிடிஸ் அல்லது காயம், சுளுக்கு அல்லது தீக்காயம் போன்ற தொற்று ஏற்பட்டால் அதை சரிசெய்ய உதவுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அன்னாசி பலம் நம்மில் பலருக்கு பிடித்த பழங்களில் ஒன்று. பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அன்னாசி பழம் அல்வா செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

அன்னாசி பழம் - 1.

ரவை - 1 கப்.

சர்க்கரை - ¼ கிலோ.

கேசரி பவுடர் - சிறிதளவு.

உப்பு - 1 சிட்டிகை.

நெய் - 2 ஸ்பூன்.

ஏலக்காய் பொடி - 7 கிராம்.

எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்.

முந்திரி - 1 கப்.

செய்முறை :

முதலில் அல்வா செய்ய தேவையான அன்னாசி பழத்தை, தோல் சீவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே நேரம் அல்வா செய்ய தேவையான பொருட்களை எல்லாம் தயார் நிலையில் வைக்கவும்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடேற்றவும், பின்னர் இதில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் ஒரு கப் ரவை மட்டும் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தற்போது இதே கடாயில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். இதை தொடர்ந்து அதில் சர்க்கரை மற்றும் நறுக்கி வைத்த அன்னாசி துண்டுகளை சேர்த்து வதக்கவும். வண்ணத்திற்கு கேசரி பவுடர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும்.

Also Read | வெறும் 10 நிமிடம் போதும் காலை உணவுக்கு ஏற்ற முட்டை சான்விட்ச் செய்யலாம்!

இதனிடையே பெரிய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடேற்றுங்கள். நெய் கரைந்ததும் இதில் முந்திரி, ஏலக்காய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். தொடர்ந்து இதில் அன்னாசி பழம் வேக வைத்த தண்ணீரை பழத்துடன் சேர்த்துக்கொள்ளவும்.

பின்னர் இந்த சேர்மத்துடன் சிறிதளவு உப்பு, ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு (புளிப்பு சுவை தேவைப்பட்டால்) மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதிக்கும் நிலையில், இதில் நாம் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கிளறிவிட வேண்டும். ரவை கட்டி பிடிக்காதவாறு நன்று கிளறி கொண்டே இருக்க அன்னாசி அல்வா தயாராகும்.

top videos

    கண்களுக்கும், நாவிற்கும் ருசி சேர்க்கும் இந்த சுவையான அன்னாசி அல்வாவின் மீது வறுத்த முந்திரி பருப்பு சிலவற்றை தூவி சுட சுட ஒரு தட்டில் அல்லது கோப்பையில் பரிமாறலாம்.

    First published:

    Tags: Evening Snacks, Sweet recipes