முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடலுக்கு ஆற்றல், ஆரோக்கியம் தரும் கேழ்வரகு புட்டு செய்வதற்கான சிம்பிள் டிப்ஸ்.!

உடலுக்கு ஆற்றல், ஆரோக்கியம் தரும் கேழ்வரகு புட்டு செய்வதற்கான சிம்பிள் டிப்ஸ்.!

ராகி புட்டு

ராகி புட்டு

உங்களது குழந்தைகளுக்கு கேழ்வரகு கூழ் பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்குப் பிடித்தார் போல், இனிப்பு சுவையுடன் நீங்கள் கேழ்வரகு புட்டு அதாவது ராகி புட்டு நீங்கள் செய்து கொடுக்கலாம். இதோ சிம்பிள் டிப்ஸ் இங்கே...

 • Last Updated :
 • Tamil Nadu, India

இன்றைக்கு அரிசிக்கு மாற்றாக மக்கள் பயன்படுத்தக்கூடிய மற்றொரு தானியம் என்றால் அது ராகி எனப்படும் கேழ்வரகு தான். இதில் அதிகளவு இரும்புச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு வலிமை தருகிறது. மேலும் உடலில் உள்ள ரத்த சோகையை நீக்கி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

மேலும் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, தேவையில்லாத கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இவ்வாறு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளதால், உங்களுடைய அன்றாட உணவில் கூட ராகியை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

உங்களது குழந்தைகளுக்கு கேழ்வரகு கூழ் பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்குப் பிடித்தார் போல், இனிப்பு சுவையுடன் நீங்கள் கேழ்வரகு புட்டு அதாவது ராகி புட்டு நீங்கள் செய்து கொடுக்கலாம். இதோ சிம்பிள் டிப்ஸ் இங்கே...

ராகி புட்டு செய்ய தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 2 கப்

ராகி மாவு ( கேழ்வரகு) – 1 கப்

துருவிய தேங்காய் – 1 கப்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – 2 சிட்டிகை

top videos

  செய்முறை:

  கேழ்வரகு புட்டை நீங்கள் செய்வதற்கு முன்னால், மேற்கூறியுள்ள அரிசி மாவு, ராகி மாவு, தேங்காய் துருவல் போன்றவற்றை முதலில் எடுத்து வைத்து கொள்ளவும். பின் தேங்காய் துருவல் தவிர்த்து அனைத்து பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் நன்கு கலந்துக் கொள்ளவும்.
  பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து விட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் ஈரமான துணியால் மூடி வைக்கவும். இதையடுத்து இட்லி பாத்திரத்தில் அல்லது ஒரு புட்டு மேக்கரில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பின்னர் எப்போதும் போல பிசைந்து வைத்துள்ள மாவை தட்டில் வைத்து ஆவி வரும் வரை வேக வைக்கவும்.
  இறுதியில் வெளியில் எடுத்து உங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து பரிமாறலாம். இதோடு நீங்கள் குழல் புட்டு வேண்டும் என்று நினைத்தால், புட்டு மேக்கருக்குள் சிறிதளவு மாவு, இதைத்தொடர்ந்து தேங்காய் துருவல் என மாறி மாறி வைக்க வேண்டும். பின்னர், மூடியை மூடி சுமார் 8- 10 நிமிடங்கள் நீராவியில் வேக வைக்கவும்.
  நன்கு ஆவி வந்ததும் வெளியில் எடுத்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பரிமாறலாம். நிச்சயம் சுவையோடு உடலுக்கு ஆற்றலை தருகிறது. எனவே இந்த கோடை விடுமுறை நாள்களில் உங்களது குழந்தைகளுக்கு ஹெல்த்தி ரெசிபி செய்து தர வேண்டும் என்றால் கட்டாயம் இதை செய்துக்கொடுங்கள்.
  First published:

  Tags: Breakfast, Healthy Food, Ragi