முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அனுமன் ஜெயந்தி ஸ்பெஷலாக மிளகு வடை செய்யுங்க..!

அனுமன் ஜெயந்தி ஸ்பெஷலாக மிளகு வடை செய்யுங்க..!

மிளகு வடை

மிளகு வடை

Hanuman Jayanthi Millagu Vadai | உளுந்து வடைக்கு சேர்க்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவை இதில் சேர்க்கப்படுவதில்லை. சுவையான மிளகு வடை செய்ய ரெசிபியை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மிளகு வடை முக்கியமாக மிளகு, உளுந்து ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த வடை பெருமாள் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது. இந்த மிளகு வடையை வடை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு சாற்றுவார்கள். நாளை அனுமன் ஜெயந்தி அதனால் இந்த மிளகு வடையை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

உளுந்தம் பருப்பு – 200 கிராம்

அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயப் பொடி – சிறிதளவு

நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை

1.உளுந்தம் பருப்பை முதலில் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் வடிகட்டில் உளுந்தம் பருப்பைச் சேர்த்து, தண்ணீர் முழுவதையும் நன்றாக வடிகட்டவும்.

2. இப்போது உளுந்தம் பருப்புடன் தேவையான உப்பினைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்கமால் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும். அதாவது உளுந்தம் பருப்பினை 70 சதவீதம் அரைத்தால் போதுமானதாக இருக்கும்.

3. மிளகு, சீரகத்தை தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல், கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

4. ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்த மாவு, பொடித்த மிளகுப் பொடி, சீரகப் பொடி, அசிரி மாவு, பெருங்காயப் பொடி ஆகியவற்றை சேர்த்து பிசைய வேண்டும்.  இப்போது 1 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெயை பிசைந்த உளுந்து கலவையில் சேர்த்து, நன்கு ஒருசேர பிசைந்து கொள்ளவும்.

5. இப்போது உளுந்த மாவை சிறிதளவு எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

Also see... Hanuman Jayanti 2023 | அனுமன் ஜெயந்தி எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்..

6. அப்படி உருட்டிய மாவை வாழையிலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெயைத் தடவி வடையாகத் தட்டவும்.

7. இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி தட்டிய வடையை சட்டில்யில் போட்டு நிறம் மாற ஆரம்பித்ததும், அடுப்பினை குறைத்து பொன்னிறமாக இருபுறமும் வெந்ததும் வடையை வெளியே எடுக்கவும்.

8. இதுபோலவே எல்லா மாவினையும் வடைகளாகச் சுட்டு எடுக்கவும். இப்போது சுவையான மிளகுவடை ரெடி.

top videos

    இந்த வடை பிய்க்கும் போது தட்டை போல் உடையும்.

    First published:

    Tags: Evening Snacks