முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அனுமன் ஜெயந்தி ஸ்பெஷல்: 10 நிமிடத்தில் செய்யலாம் அவல் பாயாசம்!

அனுமன் ஜெயந்தி ஸ்பெஷல்: 10 நிமிடத்தில் செய்யலாம் அவல் பாயாசம்!

அவல் பாயசம்

அவல் பாயசம்

hanuman Jayanthi 2023 | அனுமன் ஜெயந்திக்கு அவல் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாயாசம் செய்வது மிகவும் சுலபம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அவல் பாயசம் மிகவும் விரைவாக செய்யகூடிய அதே சமயத்தில் சுலபமான பாயசமாகும். இதனை 10 – 15 நிமிடங்களில் செய்து விடலாம். சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்த்து இந்த பாயசத்தை செய்யும்போது சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். அவல் பாயாசம் கிருஷ்ண ஜெயந்தி, கிருத்திகை மற்றும் அனுமன் ஜெயந்தி போன்ற விசேஷ நாட்களில் இதனை செய்து  படைக்கலாம். அந்த வகையில் நாளை அனுமன் ஜெயந்தி, இந்த அவல் பாயாசத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

கெட்டி அவல் - 1/2 கப்

வெல்லம் - 1/4 கப்

பால் - 2 கப்

ஏலக்காய் - 1

முந்திரிப்பருப்பு - 5

நெய் - 2 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

1. வாணலியில், நெய் ஊற்றி முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

2. அதே நெய்யில் அவலை போட்டு பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும். பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். பால் நன்றாக கொதித்து சுட்டி வரும் போது வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்க வேண்டும்.

3.பின்னர் 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும். அத்துடன் ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.

4. வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம். இப்போது சூப்பரான அவல் பாயாசம் ரெடி.

' isDesktop="true" id="928762" youtubeid="WtEzATzAjto" category="food">

top videos

    குறிப்பு: அவல் நன்கு வெந்தவுடன் தான் வெல்லம் சேர்க்கவேண்டும். வெல்லம் சேர்த்த பின் அவல் வேகாது.

    First published:

    Tags: Sweet recipes