முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பச்சை பயிறு தால்... தாபா ஸ்டைல் ரெசிபி.. ட்ரை பண்ணி பாருங்கள்..!

பச்சை பயிறு தால்... தாபா ஸ்டைல் ரெசிபி.. ட்ரை பண்ணி பாருங்கள்..!

பச்சை பயிறு தால்.

பச்சை பயிறு தால்.

Green Moong dal | பச்சை பயறை கொண்டு தாபா ஸ்டைல் பச்சை பயறு தால் செய்யுங்கள். இந்த தால் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சப்பாத்தி, நாண் அல்லது புல்கா செய்ய போறீங்கனா அதற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய ப்ளான் பண்ணுவீங்கள? அப்படினா இந்த  உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? அப்படியானால் இந்த பச்சை பயறு தால் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

இஞ்சி - 1 இன்ச்

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு... 

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 2

செய்முறை:

1. முதலில் பாசி பயறை 3 கப் நீரில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.  பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி  இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.

2.பின்பு அதில் ஊற வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து, மஞ்சள் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு தூவி, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி வைக்க வேண்டும்.

3. இப்போது 3-4 விசில் விட வேண்டும். பிறகு மிதமான தீயில் வைத்து, மீண்டும் 10 நிமிடம் பயறை வேக வைத்து இறக்க வேண்டும். விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.

top videos

    4. பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவ வேண்டும். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள தால் உடன் சேர்த்து கிளறினால், சுவையான தாபா ஸ்டைல் பச்சை பயறு தால் ரெடி.

    First published:

    Tags: Food, Vegetable