முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாம்பழங்களை தோல் நீக்கிவிட்டு சாப்பிட கஷ்டமா இருக்கா..? இந்த டிப்ஸை பாருங்க..!

மாம்பழங்களை தோல் நீக்கிவிட்டு சாப்பிட கஷ்டமா இருக்கா..? இந்த டிப்ஸை பாருங்க..!

மாம்பழம்

மாம்பழம்

ஆன்லைனில் மாம்பழத்தை எப்படி உரிக்கலாம்? என்பது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடைக்கால சீசன் பழங்களில் முக்கியமானது மாம்பழங்கள் தான். இதில் பாஸ்பரஸ்,கால்சியம், செலினியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. அதே சமயம் நாவிற்கு அதிக சுவையைக் கொடுக்கிறது மாம்பழங்கள்.

அதுவும் கோடைக்காலம் தொடங்கினாலே மாம்பழ சீசனும் உடன் வந்திடும். மாங்காய் தொக்கு, மாம்பழ ஜூஸ், மாங்காய் சாதம், என இதன் லிஸ்டுகள் நீண்டுகொண்டே இருக்கும். அந்தளவிற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பழங்கள் என்றால் கையில் பிசுபிசுவென்று ஒட்டிக்கொள்ளும். இதுப்போன்ற நிலை உங்களுக்கும் ஏற்படுகிறதா.? இதோ இனி ஏற்படாமல் இருக்க இந்த ஹேக்குகள் உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

மாம்பழத் தோலை எளிதாக உரிப்பது எப்படி..?

இன்றைக்கு யூடியூப் உள்ளிட்ட பல சோசியல் மீடியாக்களில் சமையலுக்கு என்றே பல சேனல்கள் உள்ளது. இதைப் பார்த்து சமைக்கும் போது தனிச்சுவையை நாம் பெற முடியும்.

அந்தவகையில் ஆன்லைனில் மாம்பழத்தை எப்படி உரிக்கலாம்? என்பது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு உங்களுக்குத் தேவையானது ஒரு கூர்மையான விளிம்புகளுடன் கூடிய கண்ணாடி டம்பளர் போதும். இதற்கு முதலில் நீங்கள் மாம்பழத்தை கத்தியைக் கொண்டு வெட்டிக்கொள்ள வேண்டும். கொட்டையை தனியாக எடுத்து வைத்துவிட்டு, நீளமாக வெட்டிக்கொள்ள வேண்டும். இப்போது மாம்பழ தோலுடன் இரண்டு பெரிய மாம்பழ துண்டுகள் கிடைக்கும்.

Also Read | உப்பு மிளகாய் தூள் போட்டு மாங்காய் சாப்பிட ரொம்ப பிடிக்குமா..? அப்போ நீங்கதான் இதை படிக்கனும்..!

இதையடுத்து, ஒரு கையில் மாம்பழ துண்டு மற்றும் மற்றொரு கையில் கண்ணாடி டம்ளரைப் பிடித்துக் கொண்டு முனையில் இருந்து மாம்பழத்தின் மறுமுனை வரை இழுக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது தோல் மட்டும் உங்களது கையில் இருக்கும். மாம்பழ சதை கண்ணாடி டம்ளரில் விழுந்து விடும். இனி ஈஸியாக நீங்கள் ஜூஸ் செய்து சாப்பிடலாம்.

' isDesktop="true" id="964457" youtubeid="2BT1cd49pIw" category="food">

இரண்டாவதாக நீங்கள், ஒரு கண்ணாடி டம்ளரை அதன் இடத்தில் உறுதியாக நிற்க வைக்கவும். இப்போது கண்ணாடி டம்ளரின் கைப்பிடியை ஒரு கையால் பிடித்து, கண்ணாடியின் மேல் விளிம்பிலிருந்து மாம்பழத் துண்டை கீழே இழுக்கவும்.

' isDesktop="true" id="964457" youtubeid="56FtHRnttmw" category="food">

top videos

    இது போன்று நீங்கள் கையில் மாம்பழ பிசு பிசு இல்லாமல் ஈஸியாக தோலை உரித்துக்கொள்ளலாம். மேலும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கூட கோடை வெயிலை சமாளிக்க நீங்கள் இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி மாம்பழங்களை உரித்து ஜூஸ் அல்லது மில்க் ஷேக்செய்து பருகலாம்.

    First published:

    Tags: Cooking tips, Kitchen Hacks, Mango