முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வீட்டிலேயே சுவையான ரோல் சமோசா செய்வது எப்படி.?

வீட்டிலேயே சுவையான ரோல் சமோசா செய்வது எப்படி.?

ரோல் சமோசா

ரோல் சமோசா

முக்கோண வடிவில் உள்ள சமோசாவை அனைவருக்கும் தெரியும், வித்யாசமான அனுபவத்திற்கு இந்த ரோல் சமோசாவை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய உணவு கலாச்சாரத்தில் சில உணவுகளை தவிர்க்கவே முடியாது. பஜ்ஜி, வடை, சமோசா, இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகள் வெகுஜன மக்கள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளாக இருக்கின்றன. ஒவ்வொரு தெருவிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் டீக்கடைகளில் வடை சமோசா இல்லாமல் இருக்காது.

வேக வைத்த உருளைக்கிழங்கு பட்டாணி மற்றும் மசால் உள்ளிட்டவை சேர்த்து செய்யப்பட்ட சமோசாக்களை பார்க்கும்போதே 4, 5 சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நம் மனதுக்குள் வேகம் எடுக்கும். குறிப்பாக சாப்பிட கூட நேரமின்றி ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு 2 சமோசாவும், ஒரு டீயும் இருந்தால் போதும். பசி அடங்கி விடும்.

ஆனால் பெரும்பாலான கடைகளில் சுகாதாரம் இன்றியும், தரம் இல்லாத எண்ணெயிலும் செய்யப்படும் சமோசாக்கள் நம் உடல் நலத்திற்கு தீங்கானவை. அதே சமயம் சமோசா சாப்பிட வேண்டும் என்ற நமது ஆசையையும் நாம் கட்டுப்படுத்தி விட முடியாது. இதற்கு என்ன தான் தீர்வு? வீட்டிலேயே எளிய முறையில் இதை நாம் செய்து சாப்பிட முடியும்.

தேவையான பொருட்கள்:

  • ஒன்றரை கப் மைதா மாவு
  • வேகவைத்த உருளைக்கிழங்கு – 4
  • எண்ணெய் – 100 மில்லி
  • ஒரு டீஸ்பூன் மிளகாய் விதை
  • ஒரு டீஸ்பூன் மல்லித்தூள்
  • ஒரு டீஸ்பூன் சீரகம்
  • ஒரு டீஸ்பூன் எள்ளு
  • பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
  • சுண்டல் – கால் கப்
  • பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், உப்பு சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் உருண்டையாக பிடித்து வட்ட வடிவில் தேய்த்து வைக்கவும்.
  • மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், சீரகம், எள்ளு ஆகியவற்றை பொரிக்கவும்.
  • பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சுண்டல், மிளகாய் விதை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  • இறுதியாக கொத்தமல்லி தூள் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும்.
  • மசாலா ஆறிய பின்னர் அதை உருண்டையாக பிரிக்கவும். மசாலாவை மைதா ரொட்டியில் வைத்து மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • Also Read | டீயுடன் சேர்த்து ருசிக்க 15 நிமிடங்களில் செய்யக்கூடிய 5 சாண்ட்விச் ரெசிபீஸ்..!

top videos

    இப்போது சூடான, சுவையான சமோசா தயாராகிவிட்டது. புதினா சட்னி, தக்காளி சாஸ் வைத்து சாப்பிடலாம். தரமான பொருட்களை கொண்டு வீட்டிலேயே செய்து சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

    First published:

    Tags: Evening Snacks, Samosa Recipe in Tamil, Snacks