முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முட்டை சட்னி கேள்விப்பட்டிருக்கீங்களா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

முட்டை சட்னி கேள்விப்பட்டிருக்கீங்களா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

நொடியில் தயார் ஆகும் முட்டை சட்னி செய்வது எப்படி?

நொடியில் தயார் ஆகும் முட்டை சட்னி செய்வது எப்படி?

ஒரு முறை முட்டையை வைத்து இப்படி செஞ்சு கொடுங்க. உங்க வீட்டில் உள்ளவங்க விரும்பி சாப்பிடுவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முட்டை மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று. அதனால் தான், தினசரி உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையில், முட்டை வைத்து ஒரு சூப்பரான ரெசிபி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

சப்பாத்தி, வெள்ளை சாதம் என அனைத்து விதமான உணவுக்கும் தோதாக இருக்கும் முட்டை சட்னி ஒன்றினை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை - 1.

தக்காளி - 3.

பச்சை மிளகாய் - 2.

வெங்காயம் - 1.

சீரகம் - 1/4 ஸ்பூன்.

இஞ்சி - பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்.

கறிவேப்பிலை - ஒரு கொத்து.

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

மிளகு பொடி - 1/2 ஸ்பூன்.

கொத்தமல்லி தழைகள் - 1 கொத்து.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முட்டை சட்னி செய்வதற்கு முன்னதாக வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் சீரகம், வெங்காயம், பச்சை மிகளாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இதில் இஞ்சி - பூண்டு விழுது மற்றும் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.

Also Read | வயிற்றுப் புண்களை ஆற்றும் ஆட்டு குடல் குழம்பு செய்வது எப்படி..?

தொடர்ந்து மிகளாய் தூள், மிளகு பொடி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து (4-5 நிமிடங்களுக்கு) நன்கு வதக்க வேண்டும்.

தக்காளி நன்கு உறுகி, எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் இதில் முட்டையினை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். முட்டை கரு அரை திட நிலைக்கு செல்லும் வரை கிளறி அடைப்பை அணைத்துவிடவும்.

top videos

    இறுதியாக இதன் மீது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பில் இருந்து இறக்கிவிட, சுவையான முட்டை சட்னி தயார். ரொட்டி அல்லது வெள்ளை சாதத்துடன் சேர்த்து சுட சுட பரிமாறலாம்.

    First published:

    Tags: Egg, Egg recipes, Food, Food recipes