முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / டீ டைமிற்கு ஏற்ற முட்டை போண்டா .. உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்.!

டீ டைமிற்கு ஏற்ற முட்டை போண்டா .. உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்.!

முட்டை போண்டா

முட்டை போண்டா

Egg ponda | முட்டையை வேக வைத்து, பஜ்ஜி மாவு தயாரித்து செய்யும் இந்த முட்டை போண்டா வித்தியாசமாக நல்ல சுவையுடன் இருக்கும். இந்த முட்டை போண்டாவை எளிதாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். 

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாலை வேளையில் பஜ்ஜி, வடை, போண்டா போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் சூப்பராக இருக்கும். அதிலும் டீ அல்லது காபி குடிக்கும் போது, சூடாக வீட்டிலேயே முட்டை வைத்து போண்டா செய்து சாப்பிடலாம். இந்த முட்டை போண்டா செய்வதற்கு ரொம்ப நேரம் ஆகாது. சுலபமாக செய்திடலாம். 

தேவையான பொருட்கள் :

முட்டை - 6 (வேக வைத்தது)

கடலை மாவு - 1 கப்

பேக்கிங் சோடா - 1 சிறிதளவு

பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1.முதலில் முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து வைக்க வேண்டும்.

2. ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முட்டை பஜ்ஜியை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி எடுக்க வேண்டும்.

4. பின்னர் அதனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

top videos

    5. அதே போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா ரெடி...

    First published:

    Tags: Egg, Evening Snacks