பொதுவாக, பிரியாணி என்றால் அனைவருக்கும் பிடிக்கும், அதிலும் சிலருக்கு, பிரியாணி சமைக்கும் பாத்திரத்தின் கீழ் சற்று கறுகிய நிலையில் இருக்கும் பிரியாணி என்றால் அதன் சுவையே அலாதி என்பார்கள். அது உண்மை தான் என்றாலும், கருகிய உணவுகளை உண்பதால், இளமை காலங்களில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் நாட்கள் செல்ல செல்ல, கேன்சர் பாதிப்பு வரை வரக்கூடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
2002ம் ஆண்டே, ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர், உணவில் இருக்கும் கருகிய பகுதிகளை அகற்றிவிட்டு உண்ண வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். உணவு வகைகளை, 120 டிகிரி செல்சியசுக்கு அதிகமான சூட்டில், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் சமைக்கும் போது அதில் acrylamide என்ற அமிலம் உருவாகிறது என்றும், இந்த அமிலம், விலங்குகளில் பரிசோதனை செய்த போது அவற்றிற்கு புற்றுநோய் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உருளைகிழங்கு, பிரெட், பிஸ்கட், தானியங்கள், காபி போன்றவற்றை 120 செல்சியசிற்கு மேல் சமைக்கும் போது இந்த acrylamide அமிலம் அந்த உணவுகளில் உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஏசி இல்லாமல் உங்கள் வீட்டை குளுகுளுன்னு வைக்க சில டிப்ஸ்!
விலங்குகளில் புற்றுநோய் ஏற்படுத்துவதாக ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், மனிதர்களுக்கும் இந்த acrylamide அமிலம் புற்றுநோயை உண்டாக்க கூடும் என்கிறது European Food Safety Authority. குறிப்பாக குழந்தைகளுக்கு என்று எச்சரிக்கிறது இந்த அமைப்பு..
இந்த acrylamide அமிலம் புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று லெபனான் பல்கலைக்கழகம் தெரிவித்தாலும், கருகிய உணவுகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக ஆண்டுகள் கணக்கில் கருகிய உணவுகளை நாம் ருசிக்காக உண்ணும் போது, நீண்ட காலத்தில் அவை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எந்த ஆய்வு முடிவுகளும் திட்டவட்டமாக மறுக்கவில்லை.
ஒருவேளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டுவிடலாம் என்று தோன்றினாலும், இதே பிரச்சனை நாம் சமைக்கும் உணவுகளிலும் இருக்கும் என்கின்றனர். உதாரணமாக, வீட்டிலேயே உருளை கிழங்கு சிப்ஸ் செய்து கொள்ளலாம் என்றாலும், வெட்டிய உருளைகிழங்கை குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைப்பது, இந்த acrylamide அமிலம் உருவாவதை 90 சதவிதம் குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றன. உணவே மருந்து என்ற காலம் மாறி, உண்ட உணவு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க மருந்து எடுக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம் என்றாலும், கருகிய உணவுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Food poison, Food recipes