முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரோஸ் மில்க் புட்டிங் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரோஸ் மில்க் புட்டிங் செய்வது எப்படி?

சுவையான ரோஸ் மில்க் புட்டிங் செய்வது எப்படி?

சுவையான ரோஸ் மில்க் புட்டிங் செய்வது எப்படி?

Rose Milk Pudding Recipe In Tamil | நம்மில் பலருக்கு ரோஸ் மில்க் பிடிக்கும். ஆனால், ரோஸ் மில்க் புட்டிங் கேள்விப்பட்டதுண்டா?... இதோ ரெசிபியை நாங்கள் கூறுகிறோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடைக்காலம் வந்தாலே சர்பத் மற்றும் ரோஸ் மில்க் விற்பனை களைகட்டும். ஏனென்றால், நம்மில் பலர் வெயில் தாக்கம் தாங்க முடியாமல் அடிக்கடி ரோஸ் மில்க் குடிப்போம். அப்படி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ரோஸ் மில்க் வைத்து ஒரு சுவையான புட்டிங் செய்யலாம் தெரியுமா?.

வாருங்கள் ரோஸ் மில்க் பயன்படுத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மற்றும் சட்டென தயாராகும் புட்டிங் ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முழு கொழுப்புள்ள பால் - 500 லிட்டர்.

சர்க்கரை - 1/4 கப்.

ரோஸ் சிரப் - 4 ஸ்பூன்.

சோளமாவு - 1/4 கப்.

காய்ச்சி ஆறவைத்த பால் - 1/4 கப்.

ரோஸ் ஃபுட் கலர் - 2 சொட்டு.

உப்பில்லாத வெண்ணெய் - சிறிது.

செய்முறை :

முதலில், ஒரு பாத்திரத்தில் சோளமாவு, கொதிக்க வைத்து ஆறவைத்த பால் சேர்த்து, அதில் ரோஸ் ஃபுட் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இப்போது, மற்றோரு பாத்திரத்தில் கொழுப்புள்ள பாலை ஊற்றி அதில் சர்க்கரை, ரோஸ் சிரப் சேர்த்து நன்றாக காய்ச்சவும்.

Also Read | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரோஸ் மில்க் வீட்டிலேயே செய்து கொடுக்க டிப்ஸ்..!

பின்பு, தயார் செய்த சோளமாவு கலவையை இதில் ஊற்றி பால் கெட்டி ஆகும் வரை நன்கு கலந்துவிடவும்.

பால் நகு கெட்டியாக வந்தவுடன் அதில், வெண்ணை சேர்த்து கலந்து இறக்கி சிறு சிறு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். அதை 2 மணிநேரம் குளிர்வூட்டவும்.

top videos

    பின்பு அச்சில் இருந்து எடுத்தால் ரோஸ் மில்க் புட்டிங் தயார். இதில் சிறிது ரோஸ் சிரப்பை அதின் மேல் ஊற்றி, பிறகு பிஸ்தாவை நறுக்கி தூவி பரிமாறவும்

    First published:

    Tags: Food, Food recipes, Rose Milk