முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செய்ய ஈஸியான ரெசிபி...

உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செய்ய ஈஸியான ரெசிபி...

உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

potato recipe | இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல் சாதம், தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். இன்று இந்த வறுவல் செய்முறையை பார்க்கலாம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும் போது, அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கை இப்படி செய்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெசிபியை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.  இந்த ரெசிபியை சாம்பார் மற்றும் ரச சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4

மிளகு - 15

பச்சை மிளகாய் - 2

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1. முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

2. பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, உருளைக்கிழங்கினை தோலுரித்து விட்டு, பின் அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், 1/2 டீஸ்பூன் பொடித்த மிளகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

4. பிறகு அதில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

top videos

    5. பின் அதில் மீதமுள்ள பொடித்த மிளகு, சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு, இறுதியில் சர்க்கரையை சேர்த்து பிரட்டி இறக்கினால், உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி

    First published:

    Tags: Potato recipes