முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பீட்ரூட் பொரியல்.. 5 நிமிடத்தில் செய்ய இதோ ரெசிபி..!

பீட்ரூட் பொரியல்.. 5 நிமிடத்தில் செய்ய இதோ ரெசிபி..!

பீட்ரூட் பொரியல்

பீட்ரூட் பொரியல்

beetroot Poriyal | பீட்ரூட்டைக் கொண்டு பொரியல் செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா..? மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் பொரியல் செய்யலாம். பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். முக்கியமாக பீட்ரூட் பொரியலை செய்வது மிகவும் சுலபம். உங்களுக்கு பீட்ரூட் பொரியலை எளிய முறையில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பீட்ரூட் - 1

பச்சை மிளகாய் -1

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - 1/4 கப்

துருவிய தேங்காய் - 3-4 டேபிள் ஸ்பூன்

பீட்ரூட் பொரியல்

செய்முறை: 

1.முதலில் பீட்ரூட்டை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.  பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

3.பின் அதில் பெருங்காயத் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் வெங்காயத்தைப் போட்டு, வெங்காயம் வேக சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

4. பின்னர் நறுக்கிய பீட்ரூட்டைப் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, 1/4 கப் நீரை ஊற்றி கிளற வேண்டும்.

5. பின்னர் அதனை மூடி வைத்து குறைவான தீயில் பீட்ரூட்டை வேக வைக்க வேண்டும்.

5. பீட்ரூட் நன்கு வெந்து, நீர் வற்றியதும் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி.

First published:

Tags: Beetroot, Vegetables