முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / துர்கா ஸ்டாலின் கணவருக்காக செய்யும் ’கொடுவா மீன் குழம்பு’ ரெசிபி இதுதான்..!

துர்கா ஸ்டாலின் கணவருக்காக செய்யும் ’கொடுவா மீன் குழம்பு’ ரெசிபி இதுதான்..!

கொடுவா மீன் குழம்பு

கொடுவா மீன் குழம்பு

வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் மீன் எது என்று கேட்டதற்கு” வறுவலில் வஞ்சரம் நன்கு சாப்பிடுவார்கள். குழம்பு எனில் காலா மீன், கிழங்கா மீன் விரும்பி சாப்பிடுவார்கள்” என்று கூறுகிறார் துர்கா ஸ்டாலின்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பல வீடியோக்களில் முதல்வர் ஸ்டாலின் எங்கள் வீட்டு மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருப்பார். குறிப்பாக அவர் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் மீன் குழம்பு சுவைக்க சொல்லி பரிமாறுவார். இந்த கை பக்குவத்திற்கு காரணம் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்தான். அவருடைய கிட்சன் டூர் வீடியோவை தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்டது. அதில் துர்கா ஸ்டைல் மீன் குழம்பு ரெசிபியை பகிர்ந்திருந்தார்.

இந்த மீன் குழம்பு பக்குவத்தை யார் சொல்லி கொடுத்தது என்ற கேள்விக்கு ”என் அம்மாவோட அம்மா (பாட்டி) செய்யும் ரெசிபியை பார்த்து கற்றுக்கொண்டேன். இன்று வரை அவர் சொல்லிக்கொடுத்தபடி தான் சமைக்கிறேன்” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் மீன் எது என்று கேட்டதற்கு” வறுவலில் வஞ்சரம் நன்கு சாப்பிடுவார்கள். குழம்பு எனில் காலா மீன், கிழங்கா மீன் விரும்பி சாப்பிடுவார்கள்” என்று கூறுகிறார் துர்கா ஸ்டாலின்.

வீடியோவில் மீன் குழம்பு ரெசிபி அளவுகளை பெரிதாக குறிப்பிடவில்லை. இருப்பினும் என்னென்ன தேவையான பொருட்கள், மசாலாக்களை சேர்த்துக்கொள்வார் என்பதை பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து உங்களுக்காக இந்த ரெசிபி...

தேவையான பொருட்கள் :

கொடுவா மீன்

புளி

தக்காளி

சின்ன வெங்காயம்

குழம்பு மிளகாய் தூள்

பச்சை மிளகாய்

கறிவேப்பிலை

கொத்தமல்லி

பூண்டு

சீரகம்

' isDesktop="true" id="916312" youtubeid="_4nPUBg8xhQ" category="food">

செய்முறை :

முதலில் குழம்புக்கு பாத்திரத்தில் புளியை கரைத்து கரைசலை தனியாக எடுத்துக்கொள்கிறார்.

பின் அதில் தக்காளி பிழிந்து கரைத்துக்கொள்கிறார். அதோடு மிளகாய் தூள் சேர்த்து கலந்துகொள்கிறார்.

பின் அம்மியில் கொத்தமல்லி , கறிவேப்பிலை சிறிதளவு, சீரகம், மிளகு, ஒரு துண்டு தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்கிறார். பின் அதையும் அந்த புளி கரைசலில் சேர்த்து கலந்துகொள்கிறார்.

Also Read : டிரெண்ட் மாறினாலும் அம்மிக்கல், மண் பானை சமையலை விரும்பும் துர்கா ஸ்டாலின் சமையலறை..!

கரைசல் தயார் ஆனதும், மண் சட்டி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வீட்டில் அவரே தயாரித்த வடகம் சேர்த்து பொறிக்கிறார்.

பின் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஒரு கொத்து, பச்சை மிளகாய் 2, சேர்த்து வதக்கிக்கொள்கிறார்.

நன்கு வதங்கியதும் கரைத்த புளி கரைசலை ஊற்றிக்கொள்கிறார்.

பின் தட்டுப்போட்டு மூடி நன்கு சுண்ட கொதிக்க வைத்துக்கொள்கிறார்.

சுண்டியதும், மீன் போட்டு நன்கு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடுகிறார்.

top videos

    இதுதான் துர்கா ஸ்டாலில் மீன் குழம்பு ரகசியம். நீங்களும் உங்கள் வீட்டு அளவு பதத்தில் மசாலாக்களை சேர்த்து இந்த சுவையில் மீன் குழம்பு செய்து பாருங்கள்.

    First published:

    Tags: CM MK Stalin, Cooking tips, Durga Stalin, Fish