முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வாத்து முட்டையில் ஆம்லெட் செஞ்சுருக்கீங்களா..? ட்ரை பண்ணுங்கள்...!

வாத்து முட்டையில் ஆம்லெட் செஞ்சுருக்கீங்களா..? ட்ரை பண்ணுங்கள்...!

வாத்து முட்டை ஆம்லெட்

வாத்து முட்டை ஆம்லெட்

Duck Omelet | எல்லா விதமான உணவுகளுடனும் சேர்த்து இந்த வாத்து முட்டை ஆம்லெட்டை சாப்பிடலாம். இதனை தயார் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் மிகக்குறைவு. எனவே இதனை அவசர காலங்களிலும் செய்து உண்ணலாம். கோழி முட்டையை காட்டிலும் இந்த முட்டை ருசியாக இருக்கும். ஒருமுறை சாப்பிட்டால் இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்பீர்கள்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாத்து முட்டை ஊட்டச்சத்துக்கான சிறந்த உணவாகும். அதில் உள்ள மஞ்சள் கருவானது அடர் மஞ்சள் நிறத்திலும், கோழி முட்டைகளை விட அதிக ஆக்ஸிஜனேற்றிகள், அதிக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அதிக வைட்டமின் ஏ ஆகியவை இருக்கிறது. கோழி முட்டைகளை விட வாத்து முட்டைகள் அதிக புரதத்தை வழங்குகின்றன. இந்த வாத்து முட்டையில் ஆம்லெட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

வாத்து முட்டை – ஒன்று

சின்ன வெங்காயம் – பத்து எண்ணம்

பச்சை மிளகாய் – 2

கல் உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

மிளகு, சீரகம் பொடித்து – 3 எண்ணம்

செய்முறை

1. முதலில் முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

2. சீரகம் மிளகினை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

3. தேவையான அளவு கல் உப்பினை சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். பின் அதனை உடைத்த முட்டையில் ஊற்றி நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.

4. அத்துடன் சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி அதனையும் முட்டை கலவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. பின்னர் அதில் பச்சை மிளகாயையும் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக சீரகம் மற்றூம் மிளகு பொடியை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

6. இப்போது தோசை கல்லில் நல்ல எண்ணெயை ஊற்றி முட்டைக் கலவையை வட்ட வடிவில் ஊற்றவும். அது ஒரு பறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போடவும்.

Also see... காடை முட்டை குழம்பு செய்வது எப்படி? இதோ ரெசிபி

7. ஓரிரு நிமிடங்களில் அடுப்பினை அணைத்து விட்டு முட்டையை எடுத்து விடவும். இப்போது சுவையான வாத்து முட்டை ஆம்லெட் ரெடி.

குறிப்பு: நல்ல எண்ணெய் மற்றும் சின்ன வெங்காயம் பயன்படுத்துவதால் ஆம்லெட் சுவையாக இருக்கும்.

top videos

    விருப்பமுள்ளவர்கள் முட்டை கலவையில் தேவையான அளவு மஞ்சள் பொடி சேர்த்து ஆம்லெட்டை செய்யலாம்.

    First published:

    Tags: Egg recipes