முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்க குழந்தை ரொம்ப ஒல்லியா இருக்கா..? அப்போ இந்த ஊட்டச்சத்து நிறைந்த லட்டுவை கொடுங்க..!

உங்க குழந்தை ரொம்ப ஒல்லியா இருக்கா..? அப்போ இந்த ஊட்டச்சத்து நிறைந்த லட்டுவை கொடுங்க..!

குழந்தைகளுக்கான ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு செய்முறை!!

குழந்தைகளுக்கான ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு செய்முறை!!

dry fruits laddu for babies | உங்கள் குழந்தை வயதுக்கு ஏற்ற எடையில் இல்லாமல் இருந்தால் இந்த ஊட்டச்சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டுவை செய்து கொடுங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் அனைவருக்கும் நமது குழந்தை சரியான எடையில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். ஆனால், அதற்காக நாம் எவ்வளவு பார்த்து பார்த்து சமைத்து கொடுத்தாலும் அவர்கள் சரியாக சாப்பிடுவதில்லை. அப்படி அவர்கள் சாப்பிட அடம்பிடித்தால் அவர்களுக்கான சரியான ஊட்டச்சத்து அவர்களுக்கு கிடைப்பதில்லை.

உங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் நோயோதிப்பு சக்தியை நீங்கள் அதிகரிக்க விரும்பினால் இந்த ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டுவை செய்து கொடுங்கள். இது மிகவும் சுவையாக இருப்பதால் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் சுவையான ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு எப்படி செய்யலாம் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாதாம் - 1/2 கப்.

முந்திரி பருப்பு - 1/2 கப்.

பிஸ்தா - 1/4 கப்.

வால்நட் - 1/2 கப் (விரும்பினால்).

பேரீட்சைப்பழம் - 25 துண்டுகள்.

ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி.

செய்முறை :

முதலில் லட்டு செய்ய எடுத்துக்கொண்ட பாதாம் பருப்பை என்னை இல்லாமல் 5 நிமிடம் வறுக்கவும்.

இதையடுத்து, முந்திரி பருப்பு சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும். பிறகு பிஸ்தா பருப்பு சேர்த்து 3 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பின்பு அதே கடாயில் வால்நட் சேர்த்து 3 நிமிடம் வறுத்து பிறகு வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தா உடன் சேர்க்கவும். பிறகு கடாயில் பேரீட்சைப்பழம் சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கவும்.

Also Read | சுவையான மற்றும் ஆரோக்கியமான பேரீட்சைப்பழ அல்வா செய்வோமா..? இதோ ரெசிபி...

இப்போது, மிக்ஸி ஜாரில் வறுத்த பருப்புகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பின்பு மிக்ஸியில் வறுத்த பேரீட்சைப்பழதை சேர்த்து விழுதாக அரைத்து பின்பு அரைத்த பருப்பு கலவை அதில் சேர்த்து ஒன்றாக கலக்கும் வரை அரைக்கவும்.

top videos

    பிறகு கையில் நெய் தடவி அரைத்த கலவையை எடுத்து உருண்டைகளாக உருட்டினால் சுவையான ட்ரை ப்ரூட் லட்டு தயார். இதை மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சுவையானது.

    First published:

    Tags: Dates fruit, Food, Food recipes, Laddu Recipe in Tamil