முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மணக்கும் முருங்கைக் கீரை சாம்பார்... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க..!

மணக்கும் முருங்கைக் கீரை சாம்பார்... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க..!

முருங்கைக் கீரை சாம்பார்

முருங்கைக் கீரை சாம்பார்

தினம் சாப்பிடாவிட்டாலும் வாரம் ஒரு முறை முருங்கைக் கீரை சாப்பிடுவது இரும்புச் சத்துக் குறைபாட்டை நீக்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முருங்கையும், மாடும் இருந்தால் போதும் பிழைத்துக்கொள்ளலாம் என கிராமங்களில் அதிகமாக சொல்லப்படும் பழமொழியாகும். அந்த அளவிற்கு முருங்கை மரத்தில் இருக்கும் பூ , காய், இலை வரை உடலுக்கு நன்மை சேர்ப்பவை. குறிப்பாக முருங்கைக் கீரையை மட்டும் உண்டு வந்தாலே போதும் உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் வாழலாம். தினம் சாப்பிடாவிட்டாலும் வாரம் ஒரு முறை முருங்கைக் கீரை சாப்பிடுவது இரும்புச் சத்துக் குறைபாட்டை நீக்கலாம். இரும்புச் சத்திற்காக மாத்திரைகள் உண்பதை தவிர்த்து இப்படி ஆரோக்கியமாக உண்டு உடலை பாதுக்காகலாம்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக் கீரை - 3 கையளவு

சின்ன வெங்காயம் - 120 கிராம்

பூண்டு - 8 - 10 பற்கள்

அரிசி - 2 Tsp

துவரம் பருப்பு - 2 Tsp

கறிவேப்பிலை - 1 கொத்து

கடுகு - 1/2 Tsp

காய்ந்த மிளகாய் - 6 காரத்திற்கு ஏற்ப

மஞ்சள் - ஒரு சிட்டிகை

உப்பு - சுவைக்கு ஏற்ப

எண்ணெய் - 25 ml

செய்முறை :

கீரை இலைகளை ஆய்ந்து கொள்ளவும். அரிசி மற்றும் துவரம் பருப்பை மொறமொறப்பான பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கொட்டி பொறிந்ததும் சின்ன வெங்காயம் சேர்க்கவும். பூண்டை தட்டிப்போட்டு வதக்கவும்.

தற்போது காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அரைத்து வைத்துள்ள பருப்பு , அரிசியில் தண்ணீர் ஒரு கிளாஸ் சேர்த்துக் கலந்து கடாயில் ஊற்றவும்.

கொதிக்கவிடவும். நன்குக் கொதித்து பருப்பு மசியும் வாக்கில் கீரையை அலசி அதில் போடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

தற்போது அதை கடையும் சட்டியில் கொட்டி நன்கு கடைந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைக்கவும்.

top videos

    கொதி நிலையை அடையும்போது அடுப்பை அணைத்து இறக்கிவிடவும். சுவையான முருங்கைக் கீரை சாம்பார் தயார்.

    First published:

    Tags: Drumstick, Drumstick Leaves, Drumstick Recipes