முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும் முருங்கை கீரை.. சப்பாத்தியிலும் இப்படி சேர்த்து கொடுங்க..!

சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும் முருங்கை கீரை.. சப்பாத்தியிலும் இப்படி சேர்த்து கொடுங்க..!

முருங்கை கீரை சப்பாத்தி

முருங்கை கீரை சப்பாத்தி

முருங்கை இலை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் அதிக ஆற்றலை கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் வல்லமை பெற்றது. இதை ஆய்விலும் நிரூபித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், விரைவில் செரிமானமாகும்படியும் உணவை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம். இதனால் இரவில் மிதமான உணவுக்கு பெரும்பாலானோர் சப்பாத்தியை தேர்வு செய்கிறார்கள். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அப்படி சப்பாத்தி சுடும்போது அதில் முருங்கை இலையும் சேர்த்து திரட்டி கொடுத்தால் கூடுதல் பலன். அதாவது முருங்கை இலை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் அதிக ஆற்றலை கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் வல்லமை பெற்றது. இதை ஆய்விலும் நிரூபித்துள்ளனர்.

அதாவது அந்த ஆய்வில் சுமார் 7 கிராம் முருங்கை இலை பொடி சாப்பிட கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அவர்களுடைய சர்க்கரை அளவு சராசரியாக 13.5 சதவீதம் குறைந்திருந்தது. அதேபோல் மற்றொரு ஆய்விலும் 50 கிராம் முருங்கை இலை கொடுக்கப்பட்டதில் 21 சதவீதம் குறைந்திருந்தது.

பின் அந்த ஆய்வுகளில் சிறுநீரில் உள்ள குளுக்கோஸ் அளவையும், புரதத்தையும் குரைக்கும் ஆற்றல் முருங்கை இலைக்கு உண்டு என்பதை கண்டறிந்துள்ளனர். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை இலை சிறந்த மருந்து என்றும் கூறியுள்ளனர். எனவே இத்தகைய நன்மைகளை கொண்டிருக்கும் முருங்கை இலையை அடிக்கடி உணவில் சேர்த்தோ, சூப்பாகவோ செய்து குடியுங்கள். சரி முருங்கைக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • சப்பாத்தி மாவு - 1 கப்
  • முருங்கைக் கீரை - 1/4 கப்
  • வெங்காயம் - 1
  • பூண்டு - 5
  • மஞ்சள் - 1 சிட்டிகை
  • உப்பு - தே . அளவு

செய்முறை :

வெங்காயம் மற்றும் முருங்கைக் கீரை மற்றும் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
சப்பாத்தி மாவு பிசைய பாத்திரத்தில் மாவு போட்டு அதோடு உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் , முருங்கைக் கீரை, மஞ்சள் , பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்.
தற்போது அனைத்தையும் கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எப்போதும்போல் சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்துகொள்ளுங்கள்.
பின் அரை மணி நேரம் ஊற வைத்து உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுத்தால் முருங்கைக் கீரை சப்பாத்தி ரெடி.
இதை அப்படியேவும் சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.
First published:

Tags: Chapathi, Diabetes, Drumstick Leaves