முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் இந்த பிரச்சனைகளுக்கு நல்லதா..? ஆயுர்வேத டிப்ஸ்..!

பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் இந்த பிரச்சனைகளுக்கு நல்லதா..? ஆயுர்வேத டிப்ஸ்..!

பால் மற்றும் நெய்

பால் மற்றும் நெய்

பால் மற்றும் நெய் கலவையானது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு பொருட்களிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒரே இரவில் உடலை சக்தி வாய்ந்ததாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பால் மற்றும் நெய் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பாலும் நெய்யும் பல நூற்றாண்டுகளாக நமது உணவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. பாலில் உள்ள கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நம் உடலை வலுப்படுத்த உதவுகிறது. இரவு உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் பால் குடித்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் நம்புகிறார்கள். அந்த வகையில் ஒரு ஸ்பூன் நெய்யை இளஞ்சூடான பாலில் கலந்து குடித்து வந்தால், பல நன்மைகள் கிடைப்பதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.

பால் மற்றும் நெய் கலவையானது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு பொருட்களிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒரே இரவில் உடலை சக்தி வாய்ந்ததாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளன.TOI அறிக்கையின்படி, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் நெய்யை கலந்து குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக வலுப்படுத்தி, பல செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பாலில் புரதம், கொழுப்பு மற்றும் டிரிப்டோபான் என்ற கலவை உள்ளது. இது நம் உடலில் செரோடோனினாக மாற்றுகிறது. இது நம் உடலின் நரம்புகளை தளர்த்தி, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. எனவே இரண்டையும் சேர்த்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.

சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

நீங்கள் சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்தால், பாலில் நெய் கலந்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இது ஒரு ஆயுர்வேத செய்முறையாகும், இது மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. சூடான பாலில் நெய் சேர்ப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த கலவையில் உள்ள நொதிகள் உணவை ஜீரணிக்க உதவுகிறது. தினமும் தூங்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் இந்தால் ஆயுர்வேத முறைப்படி நெய் கலந்து குடிக்கலாம்.

Also Read : உடலை குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த 5 தானியங்களை உணவில் சேர்த்துக்கோங்க..!

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பாலில் நெய் கலந்து குடித்து வந்தால் உடல் நலம் சீராகும். இத்துடன் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். இருப்பினும், இதைச் செய்வதற்கு முன், உங்கள் மருத்துவரை கேட்டுக்கொள்வது நல்லது. மேலும், அனைத்து வயதினரும் பாலில் நெய் கலந்து குடிக்கலாம், ஆனால் நீங்கள் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறீர்கள், அலர்ஜி உள்ளது எனில் இதை முயற்சி செய்யும் முன் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக்கொள்வது நல்லது. மற்றபடி ஆரோக்கியமாக உள்ள யவரும் இதை குடிக்கலாம் என்கிறனர் ஆயுர்வேத நிபுணர்கள்.

First published:

Tags: Ayurvedic Tips, Digestion Problem, Ghee, Milk