முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சிம்பிளாக செய்யலாம் பிரட் பீட்சா.. ரெசிபி இதோ!

சிம்பிளாக செய்யலாம் பிரட் பீட்சா.. ரெசிபி இதோ!

பிரெட் பீட்சா

பிரெட் பீட்சா

Bread Pizza | கடைகளில் விற்கப்படும் பிட்சாக்களை அதிகம் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே பீட்சா செய்யலாம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

உங்கள் குழந்தைகள் பிட்சாவை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு கடைகளில் விற்கப்படும் பிட்சாக்களை அதிகம் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே பீட்சா செய்யலாம். 

 தேவையான பொருட்கள்:

பிரட் - 4 துண்டுகள்

தக்காளி கெட்சப் - தேவையான அளவு

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை அல்லது மஞ்சள் நிற குடைமிளகாய் - 1

மொசரெல்லா சீஸ் - தேவையான அளவு

ஓரிகனோ - சிறிது

உப்பு - தேவையான அளவு

மிளகு - தேவையான அளவு

ஆலிவ் ஆயில் - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் ஒரு பவுலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், ஓரிகனோ, உப்பு, மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

2. பின் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை முதலில் டோஸ்டர் அல்லது தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Also see... பொன்னாங்கண்ணி கீரை மசியல் செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி...!

3.  பின்பு டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை எடுத்து அவற்றின் மேல் சிறிது தக்காளி கெட்சப்பை தடவ வேண்டும்.

4. பிறகு அதன் மேல் ஒரு ஸ்பூன் காய்கறி கலவையை வைக்க வேண்டும். அதன் பின் அவற்றின் மேல் சிறிது துருவிய சீஸை பரப்ப வேண்டும்.

top videos

    5. பின்னர் அந்த பிரட் துண்டை சூடான தோசைக்கல்லின் மீது வைத்து, மூடி வைத்து மிதமான தீயில் 2 அல்லது 3 நிமிடம் சீஸை உருக வைத்து எடுத்தால், சுவையான பிரட் பிட்சா தயார்.

    First published:

    Tags: Bread recipes