முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பஞ்சாப் ஸ்டைல் பாலக் முட்டை கறி வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!

பஞ்சாப் ஸ்டைல் பாலக் முட்டை கறி வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!

பாலக் முட்டை கறி

பாலக் முட்டை கறி

Dhaba Style Palak Egg Curry Recipe | உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு ஒருமுறை முட்டை கிரேவியை இப்படி செய்து கொடுங்க. அப்படியே அசந்து போயிருவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கீரை மற்றும் முட்டை பல ஆரோக்கியம் நன்மைகளை கொண்டது. அதனால் தான், மருத்துவர்கள் தினசரி உணவில் கீரை மற்றும் முட்டையை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

அந்தவகையில், இரண்டு சத்து நிறைந்த பொருட்களை கொண்டு ஒரு சுவையான கிரேவியை வீட்டிலேயே எப்படி சேமிக்கலாம் என்பதை நாங்கள் கூறுகிறோம். இது மிகவும் சத்து நிறைந்தது, சுவையானது. பாலக் முட்டை கறி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை - 3.

பாலக் - ஒரு கொத்து.

தக்காளி - 2.

இஞ்சி - 1 இன்ச்.

கிராம்பு - 4.

பச்சை மிளகாய் - 2.

பூண்டு பல் - 6.

கரம் மசாலா, மஞ்சள் - 1/4 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில், கிரேவி செய்ய எடுத்துக்கொண்ட முட்டையை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து அவித்து, ஓடு நீக்கி தனியே எடுத்து வைக்கவும்.

இதேப்போன்று, பசலைக் கீரையையும் இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து, தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சுத்தம் செய்த கீரையை அதில் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து அவித்து தனியே எடுத்து வைக்கவும்.

இதையடுத்து, எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். பின், ஒரு மிக்ஸியில் கீரை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

Also Read | ரவையில் செய்யப்படும் சூஜி மஞ்சூரியன்... இப்போ இதுதான் பலரது விருப்பமான டிஷ்..!

தற்போது முட்டை கறி செய்ய, பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில், தக்காளி, கரம் மசாலா, மஞ்சள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து 6 முதல் 7 நிமிடத்திற்கு நன்கு வதக்கவும்.

மசாலா வாசம் மாறும் நிலையில் இதில் அரைத்து வைத்த கீரை சேர்மம், மற்ற மசாலா பொருட்களையும் சேர்த்து 3 முதல் 4 நிமிடத்திற்கு மிதமான சூட்டில் வதக்கவும்.

top videos

    இறுதியாக இதனுடன் அவித்த முட்டைகளை இரண்டாக வெட்டி சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான ‘பாலக் முட்டை கறி’ தயார். இதை, சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

    First published:

    Tags: Food, Food recipes