கேக் என்றாலே நாம் ஏதாவது ஒரு பேக்கரியில் வாங்குவது தான் வழக்கம். ஆனால், பேரீச்சம்பழத்தை வைத்து நம்மால் வீட்டிலேயே அசத்தலான சுவையில் கேக் செய்ய முடியும். உங்களுக்கு குட்டீஸ் இருந்தால், நீங்கள் இந்த கேக்கை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். இது கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது ஆரோக்கியமானதும் கூட.
செய்வதற்கு தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 3/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
நாட்டுச் சர்க்கரை - 1 கப்
முட்டை - 2
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 125 கிராம்
வெண்ணிலா சாறு - 1 தேக்கரண்டி
கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சம்பழம் - 250 கிராம்
கார்னிஷ் செய்வதற்கான பொருட்கள்:
நாட்டுச் சர்க்கரை - 1 கப்
வெண்ணெய் - 60 கிராம்
ஹெவி கிரீம் - 300 மில்லி கிராம்
வெண்ணிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
மிக்ஸர் கொண்டு பீட் செய்யவும்:
எலெக்ட்ரிக் மிக்ஸர் ஒன்றைப் பயன்படுத்தி, வெண்ணெய், சர்க்கரை மற்றும் வெண்ணிலா சாற்றை நன்றாக கிரீமி ஆகும் வரை பீட் செய்து கொள்ளவும். அடுத்து முட்டைகளைச் சேர்க்கவும். ஒவ்வொன்றாக சேர்த்து பீட் செய்து கொள்ளுங்கள்.
அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்:
பீட் செய்து வைத்த இந்தக் கலவையை ஊறவைத்த பேரீச்சம்பழக் கலவையில் மைதா மாவுடன் சேர்த்துக் கொள்ளவும். ஒரு பெரிய மெட்டல் ஸ்பூனைப் பயன்படுத்தி, பேரீச்சம்பழம் மற்றும் மாவு நன்றாக மிக்ஸ் ஆகும் வரை நன்றாக கலக்கவும்.
பேக் செய்வதற்கு தயார்:
முன்பே நீங்கள் செட் செய்து வைத்துள்ள கேக் பாத்திரத்தில் கலவையை கரண்டியால் ஊற்றவும். 35-40 நிமிடங்களுக்கு பேக் செய்து கொள்ளவும். நடுவில் ஒரு மெல்லிய குச்சியை செருகி, அது வெந்து விட்டதா என்று சோதித்துப் பார்க்கலாம்.
கேரமல் சாஸ் தயாரித்தல் :
நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய், ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் உள்ளிட்டவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும். அடுப்பை மிதமாக வைத்து, ஒரு கொதி வரும் வரை அடிக்கடி நன்றாக கிண்டி விட வேண்டும். தீயை குறைத்து மேலும் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
Also Read | Fluffy Pan Cake | இந்த டிப்ஸ் போதும்… ‘வாவ்’ சொல்ல வைக்கும் பஞ்சு போன்ற மென்மையான பான் கேக் ரெடி!
இறுதியாக...
ஸ்கியூவர் கொண்டு புட்டிங்கை கொத்தி விடவும். அதில் சூடான 1/2 கப் சாஸை ஊற்றவும். 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அவ்வளவு தான், நீங்கள் அதனை வெட்டி பரிமாறலாம். சாப்பிடுவதற்கு முன் மீதமுள்ள சாஸை அவற்றின் மீது ஊற்றிக் கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.