முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெயிலுக்கு குளுகுளுனு தயிர் பூரி.. வீட்டிலேயே செய்ய ஈசி ரெசிபி இதோ.!

வெயிலுக்கு குளுகுளுனு தயிர் பூரி.. வீட்டிலேயே செய்ய ஈசி ரெசிபி இதோ.!

தஹி பூரி

தஹி பூரி

Dahi Puri recipe | தயி பூரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மிகவும் பிரபலமானது. இதன மிருதுவான பூரிஸ் , உருளைக்கிழங்கு கலவையுடன் தயிர், கொத்தமல்லி மற்றும் புளி சட்னி சேர்த்து சாப்பிடும் போது அலாதியான சுவையில் இருக்கும்.

  • Last Updated :

சாட் வகைகளில் தஹி பூரி (தயிர் பூரி) தவிர்க்க முடியாதது. தயிரின் புளித்த சுவை, இனிப்பு சுவை , காரம் என அறுசுவையும் நாவின் மொட்டுகளை தூண்டும் சுவையே அலாதியானது. இதற்காகவே பலரும் சாட் கடைகளில் தஹி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி நமக்கு பிடித்த உணவை நாமே செய்து சாப்பிட்டால் இன்னும் அதன் சுவை தனி ரகம்தானே.

தேவையான பொருட்கள் :

பானி பூரி - 6

உருளைக்கிழங்கு - 4

சாட் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1

உப்பு - தேவைக்கேற்ப

தயிர் - 1/2 கப்

தக்காளி - 1

சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி சட்னி , புளி சட்னி - தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் உருளைகிழங்குகளை வேக வைத்து உரித்து வைத்து கொள்ளவும். பின்னர் புளி சட்னி தயார் செய்ய, புளியை ஒரு க்ளாஸ் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்து வைத்து கொள்ளவும்.

2. அதில் 3 பேரீட்சை பழம், 1/4 கப் வெல்லம், அரை ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்கு கொதி வந்ததும் அடுப்பை அனைத்து ஆறியவுடன் மிக்சியில் அரைத்து எடுத்து எடுத்து கொள்ளவும்.

3. இதனை தொடர்ந்து புளி தயாரிக்க ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி, 2 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, இதனுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

4. இப்போது ஒரு பவுலில் உருளைக்கிழங்கு எடுத்து நன்கு மசித்து அதனுடன், மிளகாய் தூள், சீராக தூள், சாட் மசாலா தூள், உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

5. மற்றொரு பவுலில் தயிர், உப்பு சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும். இப்பொது ஒரு பூரியை எடுத்து லேசாக உடைத்து அதனுள் உருளைக்கிழங்கு மசாலா, புளி சட்னி, கொத்தமல்லி சட்னி, நறுக்கிய வெங்காயம் எடுத்து கொண்டு அதன் மீது தயிர் ஊற்றி, மிக்சர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்தால் தஹி பூரி ரெடி.

top videos

    6. இதில் மாதுளை விதைகளை அழகுபடுத்தலாம், இந்த டிஷ் மிகவும் அழகாகவும் இருக்கும்.

    First published:

    Tags: Chat Recipes