முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெயில் காலம் வந்தாச்சு.. இந்த வெள்ளரிக்காய் கோதுமை சப்பாத்தியை ட்ரை பண்ணிப்பாருங்க..!

வெயில் காலம் வந்தாச்சு.. இந்த வெள்ளரிக்காய் கோதுமை சப்பாத்தியை ட்ரை பண்ணிப்பாருங்க..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இப்படி வித்தியாசமான முறையில் சப்பாத்தி சுட்டு பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோதுமை மாவில் எப்போதும் போல் சுடும் சப்பாத்தியை சாப்பிட்டு சாப்பிட்டு நாவுக்கு ருசியாக கேட்கிறதா..? ஆனாலும் டயட் முறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறதா.?

கவலையை விடுங்க.. உங்களின் இரண்டு தேவைகளையும் நிவர்த்தி செய்யும் விதமாக இப்படி வித்தியாசமான முறையில் சப்பாத்தி சுட்டு பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்

சீரக தூள் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லி தழை – 1/4 கப்

உப்பு – 1 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 1/4 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் மிக்ஸி ஜாரில் வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி பேஸ்ட் பதத்தில் கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் ஒரு கிண்ணத்தில் மாவு எடுத்துக்கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Read More : நீங்கள் சுடும் சப்பாத்தி சாஃப்டா , புஸ்ஸுனு வரனுமா..? அப்போ இந்த விஷயங்களை சேர்த்து மாவு பிசைங்க.!

 பின் அரைத்த பேஸ்ட் விழுதையும் சேர்த்துக்கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது எப்போதும் போல் சப்பாத்தி மாவுக்கு பிசைவதுபோல் பிசையுங்கள். அதில் இருக்கும் ஈரப்பதமே சரியாக இருக்கும். அடுத்ததாக அவற்றை சிறு சிறு உருண்டைகளாக போட்டு சப்பாத்தி கட்டையில் உருட்டி சுட்டு எடுத்தால் வெள்ளரிக்காய் சப்பாத்தி தயார்.

First published:

Tags: Health, Recipe