முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சம்மரை கூலாக்கும் சுவையான மேங்கோ புட்டிங் ரெசிபி... சும்ம ட்ரை பண்ணி பாருங்க..!

சம்மரை கூலாக்கும் சுவையான மேங்கோ புட்டிங் ரெசிபி... சும்ம ட்ரை பண்ணி பாருங்க..!

மாம்பழ புட்டிங்

மாம்பழ புட்டிங்

கோடைக் காலத்தில் எளிதில் கிடைக்கக் கூடிய மாம்பழம் கொண்டு, குளிர்ச்சி தரும் சியா விதைகள் சேர்த்து சுவையான இந்த புட்டிங் செய்து அசத்துங்கள்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

கோடை காலத்தில் எளிதில் கிடைக்கக் கூடிய மாம்பழம் கொண்டு, குளிர்ச்சி தரும் சியா விதைகள் சேர்த்து சுவையான புட்டிங் செய்து அசத்துங்கள். இதனை செய்வதும் எளிது, இதற்கு அதிக நேரமும் எடுக்காது. அதனால் உடனே முயற்சி செய்து பாருங்கள்.

ஏதாவது சுவையாக செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படி என்றால், நீங்கள் இந்த எளிதான செய்முறையை முயற்சி செய்து பாருங்கள். இதற்கு மாம்பழம், தேங்காய் பால் மற்றும் சியா விதைகள் தேவைப்படும். இதனை செய்ய நீங்கள் அதிகம் மெனெக்கெட வேண்டி இருக்காது. வெறும் சில நிமிடங்களில் எளிதில் செய்து விடலாம். சரி, வாருங்கள் இதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் இதன் செய்முறையைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள்:

 • மிதமாக பழுத்துள்ள மாம்பழம் - 2
 • தேங்காய் பால் - 1 1/2 கப்
 • தேன் - 3 டேபிள் ஸ்பூன்
 • சியா விதைகள் - 4 டேபிள் ஸ்பூன்
 • பட்டை பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்
 • பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்

இதன் எளிய செய்முறை:

 • இதற்கு முதலில் நீங்கள் மிதமாக பழுத்துள்ள மாங்காய் இரண்டினை எடுத்து நன்றாக கழுவ வேண்டும். கழுவி சுத்தம் செய்த பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கிய துண்டுகளை மிக்சியில் போட்டு கூழ் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 • அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சியா விதைகளைப் போடுங்கள். தேங்காய் துருவி அதனைக் கொண்டு தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் பாலை சியா விதை இருக்கும் பாத்திரத்தில் ஊற்றுங்கள். அடுத்து அதில் கொஞ்சம் தேன் மற்றும் பட்டை பொடி சேர்க்கவும். இவற்றை எல்லாம் ஒன்றாகக் கலந்து இரவு வரை அப்படியே வைத்து ஊற விடவும்.
 • இரவு ஊற வைத்துள்ளதை காலையில் எடுத்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள மாம்பழக் கூழை சேர்த்து கலக்க வேண்டும். அதில் நீங்கள் பிரெஷ்ஷான மாங்காய் துண்டுகள் சேர்க்கலாம். பாதாம் பருப்பை கிரேட்டர் கொண்டு திருவி தூவி விடலாம். இதனை ஒரு மணி நேரத்துக்கு ப்ரீசரில் வைக்க வேண்டும். அதன் பின்னர் நீங்கள் இனிதே சுவைக்கலாம்.
 • Also Read | மாம்பழங்களை தோல் நீக்கிவிட்டு சாப்பிட கஷ்டமா இருக்கா..? இந்த டிப்ஸை பாருங்க..!

top videos

  மாம்பழம் முக்கனிகளில் ஒன்று. இதன் சுவை நம்மை அடிமையாக்கி விடும் என்றும் சொல்லலாம். கோடைக் காலத்தில் எளிதில் கிடைக்கக் கூடிய மாம்பழம் கொண்டு, குளிர்ச்சி தரும் சியா விதைகள் சேர்த்து சுவையான இந்த புட்டிங் செய்து அசத்துங்கள். இதனை செய்வதும் எளிது, இதற்கு அதிக நேரமும் எடுக்காது. எதற்காக இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள், உடனே முயற்சி செய்து பாருங்கள்.

  First published:

  Tags: Mango, Sweet recipes