முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொத்தமல்லி- மாங்காய் சட்னி செஞ்சிருக்கீங்களா..? ரெசிபி இதோ...

கொத்தமல்லி- மாங்காய் சட்னி செஞ்சிருக்கீங்களா..? ரெசிபி இதோ...

கொத்தமல்லி - மாங்காய் சட்னி

கொத்தமல்லி - மாங்காய் சட்னி

கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய சீசன் பழமான மாங்காய் மற்றும் கொத்தமல்லி வைத்து ஆரோக்கியமான சட்னி செய்து ருசிக்கலாம் என்கிறார் பிரபல செஃப் மேக்னா.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னிந்திய சமையலில் காலை, இரவு என இரு வேளைகளிலும் நிச்சயம் இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதாவது டிபன் இடம் பெறும். இதற்கு எப்போதும் போல சாம்பார், சட்னி வைத்து சாப்பிடுவோம். இருந்தப்போதும் ஒரே தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புதினா, மல்லி, சட்னி என்று வைத்தால் அனைவருக்கும் வெறுப்பாகத் தான் இருக்கும்.

இந்நிலையில் இந்த கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய சீசன் பழமான மாங்காய் மற்றும் கொத்தமல்லி வைத்து ஆரோக்கியமான சட்னி செய்து ருசிக்கலாம் என்கிறார் பிரபல செஃப் மேக்னா. இதோடு இந்த சட்னியை எப்படி செய்யலாம்? என்பது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டு வைரலாகியுள்ள நிலையில், இங்கே நாமும் எப்படி கொத்தமல்லி – மாங்காய் சட்னியை செய்வது என அறிந்துக்கொள்வோம்.

கொத்தமல்லி- மாங்காய் சட்னி செய்முறை:

தேவையான பொருள்கள்:

  • கொத்தமல்லி இலை – 1 கட்டு
  • மாங்காய் – 1
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • நிலக்கடலை – 50 கிராம்
  • இஞ்சி, பூண்டு – சிறிதளவு
  • மிளகாய் – 4
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் நீங்கள் சட்னி செய்தவற்குத் தேவையானப் பொருள்களை எடுத்து வைத்துக்கொள்ளவும். மாங்காய் மற்றும் கொத்தமல்லி இலை போன்றவற்றை சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.
  • கொத்தமல்லி – மாங்காய் சட்னி செய்வதற்கு முதலில் நீங்கள் ஒரு மிக்ஸி ஜாரில் 1 டீஸ்பூன் சீரகம், நிலக்கடலை பருப்பு சேர்த்து லேசான அரைத்துக் கொள்ளவும். இதோடு இஞ்சி, பூண்டு, மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும்.
  • பின்னர் இதையடுத்து நறுக்கிய வைத்துள்ள மாங்காய், கொத்தமல்லி இலை மற்றும் ஒரு ஐஸ்கியூப் சேர்த்துக்கொள்ளவும். இதோடு உங்களுக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்தால் போதும் சுவையான கொத்தமல்லி – மாங்காய் சட்னி ரெடி.இதை நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் உள்பட தயிர், லெமன், புளி சாதம் போன்ற கலவை சாதத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.
  • பொதுவாக மாங்காயில் வைட்டமின்கள் சி, கே, ஏ, பி6 மற்றும் போலோட் உள்ளிட்ட முக்கிய வைட்டமின்கள் உள்ளது. இவை செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இதே போன்று கொத்தமல்லியில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, கொழுப்புச் சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவை உள்ளதால் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது.

top videos

    இதோடு இஞ்சி, பூண்டும் செரிமான பிரச்சனைக்குத் தீர்வு காணும் என்பதால் இந்த கோடைக்காலத்தில் நீங்கள் இந்த கொத்தமல்லி- மாங்காய் சட்டினியை தினமும் கூட செய்து சாப்பிடலாம். நிச்சயம் உங்களுக்கு சுவையோடு உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

    First published:

    Tags: Chutney, Chutney Recipe in Tamil, Mango, Puthina Chutney Recipe in Tamil