வீட்டிலேயே சுக்கு பொடியை சுலபமாக தயாரிக்கலாம்.. சிம்பிள் டிப்ஸ் இதோ!
சுக்கு பொடி
இஞ்சியைப் பயன்படுத்தி நாம் வீட்டிலேயே சுக்கு பொடி தயாரித்தால் அதனை நாம் நீண்ட நாட்களுக்கு ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம். இதை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
இஞ்சியைப் பயன்படுத்தி நாம் வீட்டிலேயே சுக்கு பொடி தயாரித்தால் அதனை நாம் நீண்ட நாட்களுக்கு ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம். இதை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
இஞ்சி என்பது தினமும் நம் உணவுகளில் பயன்படுத்தக் கூடிய ஒரு மசாலா பொருளாகும். இது உணவுக்கு சுவை மற்றும் மனம் சேர்ப்பதோடு, நம் உடல் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்கும். இது செரிமானத்திற்கு உதவுகிறது. குமட்டல் இருந்தால் அதனை குறைக்கிறது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இஞ்சியை பல நாட்களுக்கு நீங்கள் வைத்து பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினால், நீங்கள் அதனை பொடி செய்து வைத்துக் கொள்ளலாம்.
படி 1: பிரெஷான இஞ்சியை தேர்வு செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் - இதற்கு நாம் பிரெஷான இஞ்சியை எடுத்து வைத்துக் கொள்வது தான் முதல் படியாகும். இது பிரெஷானது தானா என்பதைச் சரிபார்க்க, ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து அதனை சுரண்டவும். நார் நாராக இல்லாமல் எளிதாக சுரண்ட முடிந்தால், அது பிரெஷாக இருக்கும். நார் நாராக இருந்தால் அரைப்பதற்கு கஷ்டமாக இருக்கும்.
படி 2: நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள் - குழாயைத் திறந்து ஓடும் நீரில், இஞ்சியை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். எந்த வித அழுக்கோ மண்ணோ இல்லாதவறு நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்து, ஒரு துண்டை வைத்து நன்றாக ஈரப்பதம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பின்னர், அறை வெப்பநிலையில் காய வைக்க வேண்டும்.
படி 3: தோலை சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள் - இஞ்சியின் தோலை சீவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து, இஞ்சியை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். துண்டுகள் மெல்லியதாக இருந்தால் தான் அது விரைவாகஉலர்ந்து நீரின்றி இருக்கும்.
படி 4: வெயிலில் உலர்த்துங்கள் - நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நறுக்கிய இஞ்சித் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து உலர வைப்பது தான். துண்டுகளுக்கு இடையில் இடைவெளி இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அப்பொழுது தான் அனைத்தும் நன்றாக காயும். குறைந்தபட்சம் ஒன்பது முதல் 10 நாட்களுக்கு சூரிய ஒளியின் கீழ் உலர வைக்கவும். இதற்கிடையில், இரு பக்கங்களும் சமமாக காயும் வகையில், பக்கங்களைத் திருப்பிப் போடவும். வெயிலில் உலர்த்துவதற்குப் பதில், நீங்கள் அதனை 150 டிகிரியில் 10 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்து சூடாக்கலாம்.
படி 5: பொடியாக அரைத்துக் கொள்ளவும் - நன்கு உலர்ந்த இஞ்சியை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும். பெரிய இஞ்சித் துண்டுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். இஞ்சி துண்டுகள் முழுமையாக அரையும் வரை அவற்றை அரைப்பது அவசியம்.அடுத்து சல்லடை கொண்டு சளித்து வைத்துக் கொள்ளலாம்.
இதனை காற்றுப் புகாதவாறு ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். சேமிக்கும் முன் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். வெளியில் குளிர்ச்சியான, டிரை ஆன இடத்தில அல்லது பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாமா. பல நாட்களுக்கு வைத்து உபயோசிக்கலாம்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.